அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு விவசாய சங்கங்கள் உள்பட 44 அமைப்புகளுக்கு அழைப்பு


அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு  விவசாய சங்கங்கள் உள்பட 44 அமைப்புகளுக்கு அழைப்பு
x
தினத்தந்தி 21 Feb 2018 12:27 PM GMT (Updated: 21 Feb 2018 12:27 PM GMT)

காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு 44 அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #AllPartyMeeting #Tamilnews #CauveryVerdict

சென்னை

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு, விவசாயிகளை அழைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வெளியானது. இதில், வழக்கமாகத் தரப்படும் நீரின் அளவைவிட 14.75 டிஎம்சி குறைத்து வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டது. இத்தீர்ப்பு, தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க, தமிழக அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

நாளை நடைபெற உள்ள இக்கூட்டத்தில், அரசியல் கட்சிகள் பங்கேற்க உள்ளன. எனினும், இக்கூட்டத்துக்கு விவசாயிகளையும் அழைக்க வேண்டும் என ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. தற்போது, இந்தக் கோரிக்கைக்கு அரசு செவிசாய்த்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்க விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. நாளை நடைபெறும் ஆலோசனையில்,சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் உள்ள சாதக பாதக அம்சங்கள், மேல்முறையீடு உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

 முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் உட்பட   44 அமைப்புகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.   காவிரி விவகாரம் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அய்யாக்கண்ணுக்கு தமிழக அரசு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

Next Story