தமிழகத்தில் இனி திராவிட பாணி அரசியல் எடுபடாது ”கமலஹாசனுக்கு வாழ்த்துக்கள்” பொன்.ராதாகிருஷ்ணன்


தமிழகத்தில் இனி திராவிட பாணி அரசியல் எடுபடாது ”கமலஹாசனுக்கு வாழ்த்துக்கள்” பொன்.ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 21 Feb 2018 1:28 PM GMT (Updated: 21 Feb 2018 1:28 PM GMT)

தமிழகத்தில் இனி திராவிட பாணி அரசியல் எடுபடாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #KamalHaasan #Tamilnews

சென்னை,

நடிகர் கமலஹாசனின் அரசியல் பயணம் குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

அரசியலில் கால் பதிக்கும் கமலஹாசனுக்கு எனது வாழ்த்துக்கள். தமிழகத்தில் இனி திராவிட பாணி அரசியல் எடுபடாது.

கமலின் கொள்கைக்கு பின்னரே தமிழக அரசியலா, தேசிய அரசியலா என தெரியும். இந்தியாவில் குடியுரிமை, வாக்குரிமை பெற்ற யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story