"மக்கள் நீதி மய்யம்" மக்களுக்கான கட்சி, நான் உங்கள் கருவி - கமல் பேச்சு


மக்கள் நீதி மய்யம் மக்களுக்கான கட்சி, நான் உங்கள் கருவி - கமல் பேச்சு
x
தினத்தந்தி 21 Feb 2018 2:28 PM GMT (Updated: 21 Feb 2018 2:28 PM GMT)

"மக்கள் நீதி மய்யம்" மக்களுக்கான கட்சி, நான் உங்கள் கருவி என்று கமலஹாசன் கூறியுள்ளார். #KamalHaasan #KamalPartyLaunch #MakkalNeedhiMaiam

மதுரை,

நடிகர் கமல்ஹாசன் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற  பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிமுகம் செய்து வைத்தார்.  கட்சியின் பெயர்   ”மக்கள் நீதி மய்யம் ” என்று கட்சியின் பெயரை  அறிமுகம் செய்து வைத்தார்.  

கட்சியின் பெயரையையும் கொடியையும் அறிமுகம் செய்து வைத்து கமலஹாசன் பேசியதாவது:

*"மக்கள் நீதி மய்யம்" மக்களுக்கான கட்சி, நான் உங்கள் கருவி.   உங்கள் தலைவன் அல்ல.  இனி நமக்கு நிறைய கடமை இருக்கிறது. இது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல.

 நாம் சமைக்க இருக்கும் மக்கள் ஆட்சியின் ஒரு பருக்கை சோற்றை உதாரணமாக்கி இருக்கிறேன். இந்த சோற்றுப்பருக்கையை தொட்டு பார்க்க நினைப்பவர்கள் தொட்டுப்பாருங்கள். இந்த சோற்று பருக்கையை தொட்டு பார்த்தால் ஊழலில் தோய்ந்த உங்களின் கை விரல் சுடும். தமிழகம் எங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போல் பல கூட்டங்கள் நடைபெறும். 

இவ்வாறு அவர் பேசினார்.

பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சோம்நாத் பாரதி, பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றனர்.

Next Story