மக்களின் துன்பங்களை பார்த்து இனிமேல் தான் எடுக்க வேண்டும் விஸ்வரூபம் கமல் பேச்சு


மக்களின் துன்பங்களை பார்த்து இனிமேல் தான் எடுக்க வேண்டும் விஸ்வரூபம்  கமல் பேச்சு
x
தினத்தந்தி 21 Feb 2018 3:54 PM GMT (Updated: 21 Feb 2018 3:54 PM GMT)

மக்களின் துன்பங்களை பார்த்து இனிமேல் தான் எடுக்க வேண்டும் விஸ்வரூபம் என்று நடிகர் கமல் கூறியுள்ளார். #KamalHaasan #KamalPartyLaunch

மதுரை,

மதுரை ஒத்தக்கடையில் மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டத்தில் கமலஹாசன்  தொடர்ந்து பேசியதாவது:

 நாங்கள் தத்தெடுக்கும் 8 கிராமங்களை முன்னேற்றி முன்னுதாரணமாக காட்டுகிறோம்.

* முறையாக பேச்சுவார்த்தை நடத்தினால் எந்த மாநிலத்திலிருந்தும் தண்ணீர் மட்டுமல்ல, ரத்த தானம் கூட கிடைக்கும்.

* புதிய தென் இந்தியாவின் வரைபடம் எங்கள் கட்சி கொடியில் தெரியும்.

* எங்கள் கட்சி கொடி 6 மாநிலங்களை குறிக்கிறது.

* எங்கள் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து விட்டோம் .

* என் வயதை கேலி செய்கிறார்கள், ஆயுள் குறைவாக உள்ள சிலர்.

* என் கட்சியின் கட்டமைப்பு பார்த்தால் தெரியும், என்னுடன் முடிவது அல்ல, குறைந்தது 3 அல்லது 4 தலைமுறை தாங்கும்.

* கல்வியை தனியாரிடம் கொடுத்துவிட்டு, டாஸ்மாக்கை அரசு நடத்துவது வேடிக்கையானது.

* இவ்வளவு நாள் உங்கள் உள்ளங்களில் இருந்தேன், இனி உங்கள் இல்லங்களில் இருப்பேன்.

* மக்களின் துன்பங்களை பார்த்து இனிமேல் தான் எடுக்க வேண்டும் விஸ்வரூபம்.

* மக்கள் நீதி மய்யம் கட்சியில் நிரந்தர முதல்வர் கிடையாது.

இவ்வாறு அவர் பேசி வருகிறார்.

Next Story