நாளை காலைக்குள் ஏர்செல் சேவை தடையின்றி கிடைக்கும் ஏர்செல் சிஇஒ தகவல்


நாளை காலைக்குள் ஏர்செல் சேவை தடையின்றி கிடைக்கும்  ஏர்செல் சிஇஒ தகவல்
x
தினத்தந்தி 23 Feb 2018 1:51 PM GMT (Updated: 23 Feb 2018 1:51 PM GMT)

வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நாளை காலைக்குள் ஏர்செல் சேவை தடையின்றி கிடைக்கும் என்று தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் கூறியுள்ளார். #Aircel #Networking #AircelIssue

சென்னை,

தமிழகத்தில் ‘ஏர்செல்’ சேவை 3-வது நாளாக இன்றும் முடங்கியது. சமையல் கியாஸ் முன்பதிவு, ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவு, மின்னணு பண பரிமாற்றம் போன்ற முக்கிய தேவைகளுக்கு செல்போன் அவசியம் என்ற காலகட்டத்தில் சேவை பாதிப்பால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஏர்செல் சேவையில் இருந்து மற்ற செல்போன் நிறுவனங்களில் சேவையை பெறுவதில் வாடிக்கையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். சில வாடிக்கையாளர்கள் சேவை மீண்டும் எப்போது கிடைக்கும்? என்று காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து ‘ஏர்செல்’ நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கரநாராயணன் கூறியதாவது:-

தமிழகத்தில் ஏர்செல் செல்போன் சேவை 60% சரி செய்யப்பட்டுள்ளது. நள்ளிரவுக்குள் செல்போன் சேவை முழுமையாக சீர் செய்யப்படும். தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆயிரம் பேர் செல்போன் சேவை சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நாளை காலைக்குள் ஏர்செல் சேவை தடையின்றி கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story