இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவித்ததற்கு, பிரதமரை சந்தித்து நன்றி தெரிவித்தேன் தமிழிசை செளந்தரராஜன்


இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவித்ததற்கு, பிரதமரை  சந்தித்து நன்றி தெரிவித்தேன் தமிழிசை செளந்தரராஜன்
x
தினத்தந்தி 24 Feb 2018 3:33 PM GMT (Updated: 24 Feb 2018 3:33 PM GMT)

இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவித்ததற்கு, பிரதமரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன் என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். #Tamilisai #PMModi

சென்னை,

சென்னையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி ஆளுநர் மாளிகை சென்றடைந்தார்.

இந்தநிலையில் கிண்டி ஆளுநர் மாளிகையில், பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், இல.கணேசன் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது சென்னையில் இந்தி பிரசார சபாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு பாஜக எம்.பி இல.கணேசன் அழைப்பு விடுத்தார்.
 
பிரதமர் மோடி சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில்,

நாட்டு மக்களுக்கு ரூ 5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவித்ததற்கு, பிரதமரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story