2025 ஆண்டிற்குள் இந்தியாவில் காசநோய் ஒழிக்கப்படும் : ஜே.பி. நாட்டா


2025 ஆண்டிற்குள் இந்தியாவில் காசநோய் ஒழிக்கப்படும் : ஜே.பி. நாட்டா
x
தினத்தந்தி 24 Feb 2018 7:58 PM GMT (Updated: 24 Feb 2018 7:58 PM GMT)

2025 ஆண்டிற்குள் இந்தியாவில் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என நாட்டா தெரிவித்தார்.

சோனிபட்,

2030-ம் ஆண்டுக்குள் காசநோய் முற்றிலும் நீக்கம் செய்ய மற்ற நாடுகள் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் இந்தியாவில் 2025-ம் ஆண்டிற்குள் இந்நோயை ஒழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி. நாட்டா தெரிவித்துள்ளார். 

ஒரு அதிகாரபூர்வ வெளியிட்டின் படி  நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என தேசிய மெடிகாஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் நாட்டா கூறினார்.

இந்நிலையில்,  தற்போதைய அரசு மருத்துவ துறையில் புதிய வழிமுறையை உருவாக்கியுள்ளது என ஹரியானா நிதி அமைச்சர் அபிமன்யு தெரிவித்தார்.

Next Story