ரத யாத்திரை அனுமதி பற்றி கமல்ஹாசன் கருத்து


ரத யாத்திரை அனுமதி பற்றி கமல்ஹாசன் கருத்து
x
தினத்தந்தி 20 March 2018 11:33 PM GMT (Updated: 20 March 2018 11:33 PM GMT)

ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கருத்துகள் தெரிவித்து வருகின்றன.

சென்னை,

அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ரத யாத்திரை குறித்து தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்தரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களை பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story