பெரியார் சிலை விவகாரத்தில் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி


பெரியார் சிலை விவகாரத்தில் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி  நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 21 March 2018 6:14 AM GMT (Updated: 21 March 2018 6:14 AM GMT)

பெரியார் சிலை விவகாரத்தில் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி அரசு நடவடிக்கை எடுக்கும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #PeriyarStatue #EdappadiPalanisamy

சென்னை


பெரியார் சிலை உடைப்பு சம்பவங்கள் தொடர்பாக  சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் அப்போது அவர் பேசியதாவது;-

எச். ராஜாவை கைது செய்யாததால் பெரியார் சிலைகள் உடைக்கப்படுவது தொடர்கிறது. குண்டர் சட்டத்தில் எச். ராஜாவை கைது செய்திருக்க வேண்டும்.

பெரியார் சிலை விவகாரத்தில் எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்

பெரியார் சிலை உடைக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரியார் சிலை உடைப்பு சம்பவத்தில் 12 மணிநேரத்தில் குற்றவாளி கைது செய்யபட்டு உள்ளனர், பெரியார் சிலை விவகாரத்தில் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி அரசு நடவடிக்கை எடுக்கும்  என  பேரவையில் ஸ்டாலினின் கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்  அளித்தார்.

பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக, செந்தில்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.என கூறினார்.

Next Story