தீக்குளிக்க முயன்ற 2 ஆயுதப்படை காவலர்களை சக காவலர்கள் தடுத்து நிறுத்தினர்


தீக்குளிக்க முயன்ற 2 ஆயுதப்படை காவலர்களை  சக காவலர்கள் தடுத்து நிறுத்தினர்
x
தினத்தந்தி 21 March 2018 12:33 PM GMT (Updated: 21 March 2018 12:33 PM GMT)

சென்னை டிஜிபி அலுவகலத்தில் தீக்குளிக்க முயன்ற 2 ஆயுதப்படை காவலர்களை சக காவலகள் தடுத்து நிறுத்தினர்

சென்னை

தேனியில் மாவட்ட ஆயுதப்படை காவலர்களாக இருப்பவர்கள்  ரகு, கணேஷ் இவர்கள் இருவரும் சென்னை  டிஜிபி அலுவகலத்தில்   ஒரு புகார் மனு அளித்து உள்ளனர் அதில்  தேனி காவல் அதிகாரிகள் தாங்கள் எந்த தவறும் செய்யாத பட்சத்தில்  தங்களை உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்வதாகவும் சாதி ரீதியாக  இடமாற்றம் செய்வதாக புகார் கூறினர்.

பின்னர் இருவரும் வெளியே வந்து மண் எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர் இதை தொடர்ந்து அருகில் இருந்த  போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இருவரிடமும் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story