தஞ்சை மாவட்டம் விளார் பகுதியில் ம.நடராஜன் உடல் அடக்கம் செய்யப்பட்டது


தஞ்சை மாவட்டம் விளார் பகுதியில் ம.நடராஜன் உடல் அடக்கம் செய்யப்பட்டது
x
தினத்தந்தி 21 March 2018 2:09 PM GMT (Updated: 21 March 2018 2:09 PM GMT)

நடராஜன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே அடக்கம் செய்யப்பட்டது. #RIPNatarajan #Sasikala

சென்னை,

புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று அதிகாலை காலமானார். மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு ம.நடராஜனுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் ம.நடராஜனின் உடல் ஆம்புலன்சு வாகனம் மூலம் பெசன்ட் நகரில் இருந்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள அவருடைய சொந்த ஊரான விளாருக்கு எடுத்து செல்லப்பட்டது.

 அருளானந்த நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட நடராஜன் உடலுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவருடைய சொந்த ஊரில் ம.நடராஜன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே அடக்கம் செய்யப்பட்டது. 

Next Story