‘சட்டசபையில் நீங்களே பேசிக் கொள்ளுங்கள்’ ஆளுங்கட்சியினர் மீது துரைமுருகன் கோபம்


‘சட்டசபையில் நீங்களே பேசிக் கொள்ளுங்கள்’ ஆளுங்கட்சியினர் மீது துரைமுருகன் கோபம்
x
தினத்தந்தி 21 March 2018 11:30 PM GMT (Updated: 21 March 2018 11:30 PM GMT)

சட்டசபையில் நேற்று நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் கு.பிச்சாண்டி பேசிக் கொண்டிருந்தபோது, அவையை நடத்திக் கொண்டிருந்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், 5 நிமிடத்தில் பேச்சை முடியுங்கள் என்று கூறினார்.

சென்னை,

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், தி.மு.க. கொறடா சக்கரபாணி ஆகியோர் எழுந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், துரைமுருகன் பேசும்போது, ‘‘நேற்று ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் ஒரு மணி நேரம் குறுக்கீடு இல்லாமல் பேசினார். அவருக்கு அவ்வளவு நேரம் அனுமதி அளிக்கப்பட்டது. இனி நாங்கள் (தி.மு.க.வினர்) யாரும் பேசவில்லை. நாளை (இன்று) எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் பேச மாட்டார். நீங்களே (அ.தி.மு.க.வினர்) பேசிக்கொள்ளுங்கள்’’ என்று ஆவேசமாக கூறினார்.

அதன்பிறகு, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, ‘‘3 நிமிடம், 5 நிமிடத்தில் பேசி முடியுங்கள் என்று உறுப்பினர்களை பார்த்து சபாநாயகர் சொல்வது வாடிக்கை தான். எனவே, நீங்கள் தொடர்ந்து பேசுங்கள்’’ என்று சமாதானம் செய்தார்.

அதன்பிறகு, கு.பிச்சாண்டி தொடர்ந்து பேசினார்.


Next Story