காவிரி வாரிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு தினம் தினம் அழுத்தம் கொடுத்து வருகிறது- ஓ.பி.எஸ்


காவிரி வாரிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு தினம் தினம் அழுத்தம் கொடுத்து வருகிறது- ஓ.பி.எஸ்
x
தினத்தந்தி 22 March 2018 5:10 AM GMT (Updated: 22 March 2018 5:10 AM GMT)

காவிரி வாரிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு தினம் தினம், அரசு தன்னுடைய அழுத்ததை கொடுத்து வருகிறது என மு.க.ஸ்டாலின் கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்தார். #CauveryManagementBoard #OPanneerselvam #MKStalin

சென்னை

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான 4-ம் நாள் விவாதம் இன்று தொடங்கியது.  இன்று காவிரி விவகாரம் தொடர்பாக  காரசார விவாதம் நடைபெற்றது.  அப்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது;-

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க முடியாது என நிதின்கட்கரி கூறியுள்ளார்.காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது, நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும். சென்னையில் 2015 இல் ஏற்பட்ட வெள்ளபாதிப்பு பற்றிய மத்திய ஆய்வுகுழுவின் அறிக்கை எங்கே? மத்திய குழு ஆய்வறிக்கையில் தமிழக அரசு மீது குற்றம் கூறுவதால் சமர்பிக்கவில்லையா? என கூறினார்.

மு.க.ஸ்டாலின் கேள்விக்கு   பதில் அளித்து பேசிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது;-

காவிரி வாரிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு தினம் தினம், அரசு தன்னுடைய அழுத்ததை கொடுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது; அனைவரும் கூடி பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிப்போம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது".  காவிரி வாரியம் விவகாரத்தில்,14 நாட்களுக்கு மேலாக நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளோம்.   29ஆம் தேதி வரை பொறுத்திருக்க வேண்டும்" என கூறினார்.

Next Story