சட்டியை ஓட்டையாக்கியது நீங்கள் நாங்கள் சரிசெய்து சமைக்கிறோம் திமுகவுக்கு ஓபிஎஸ் பதில்


சட்டியை ஓட்டையாக்கியது நீங்கள் நாங்கள் சரிசெய்து சமைக்கிறோம் திமுகவுக்கு ஓபிஎஸ் பதில்
x
தினத்தந்தி 22 March 2018 10:41 AM GMT (Updated: 22 March 2018 10:41 AM GMT)

சட்டியை ஓட்டையாக்கியது நீங்கள்தான் நாங்கள் சரிசெய்து சமைக்கிறோம் என திமுகவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். #TNAssembly #OPanneerselvam

சென்னை

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காலை முதலே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்டது தொடர்பான காரசார விவாதம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து பட்ஜெட் தொடர்பான திமுகவின் கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். அப்போது சட்டியை ஓட்டையாக்கியது நீங்கள் தான், அந்த ஓட்டையை சரி செய்து நாங்கள் சமைத்து வருகிறோம் என ஓபிஎஸ் கூறினார்.

நிதிநிலை அறிக்கை குறித்து ஸ்டாலின் ஓட்டை பானையில் சமைக்கிற பட்ஜெட் என கருத்து கூறியிருந்தார். அதனை நினைவு கூர்ந்து ஓபிஎஸ் சட்டசபையில் இன்று பதிலுரைத்தார்.
 
மேலும் அவர் பேசும் போது 

பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் இல்லை.  தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுதோறும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
தனிநபர் வருமானம் தற்போது ரூ.1,88,492 ஆக உயர்ந்துள்ளது.

ஆண்டுக்கு ரூ.70,000 கோடி, மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது.  தமிழக அரசின் கடன் கட்டுக்குள் உள்ளது, யாரும் பீதியை ஏற்படுத்த வேண்டாம்  என பேசினார்.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியதை அடுத்து சபாநாயகர் தனபால் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டதிருத்த மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றபட்டது. 

தனியார் மருத்துவமனைகள் பதிவு, முறைப்படுத்துதல் சட்டத்திருத்த மசோதாவும் நிறைவேறியது; போலி மருத்துவர்கள், மருத்துவ குற்றங்களை தடுக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது

Next Story