கூட்டுறவு சங்க தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் நியமனம் அ.தி.மு.க. அறிவிப்பு


கூட்டுறவு சங்க தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் நியமனம் அ.தி.மு.க. அறிவிப்பு
x
தினத்தந்தி 23 March 2018 10:11 PM GMT (Updated: 23 March 2018 10:11 PM GMT)

கூட்டுறவு சங்க தேர்தலுக்கான அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சென்னை,

தமிழகத்தில் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வரும் கூட்டுறவுத்துறை உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல்கள் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, அ.தி.மு.க. சார்பில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இதன்படி தேனி மாவட்ட பொறுப்பாளர்களாக துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டச் செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் ஆகியோரும், சேலம் மாநகர், சேலம் புறநகர் மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, வட சென்னை வடக்கு (கிழக்கு), வடசென்னை வடக்கு (மேற்கு) வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு மாவட்டங்களுக்கு கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா, அமைப்புச் செயலாளர் ஆதிராஜாராம், எம்.பி., விஜய குமார், மாவட்ட செயலாளர்கள் ராஜேஷ், வெங்கடேஷ் பாபு எம்.பி., நா.பாலகங்கா, விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ., தி.நகர் சத்தியா எம்.எல்.ஏ., ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சீபுரம் கிழக்கு, காஞ்சீபுரம் மத்தி, காஞ்சீபுரம் மேற்கு மாவட்டங்களுக்கு முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், ஏ.சோமசுந்தரம் மற்றும் நீலாங்கரை எம்.சி.முனுசாமி, மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், எஸ்.ஆறுமுகம், வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோரும், திருவள்ளூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களின் பொறுப்பாளர்களாக, ஜெ.சி.டி.பிரபாகர், அமைச்சர் பா.பென்ஜமின், எம்.எல்.ஏ.க்கள் ஏ.அலெக் சாண்டர், சிறுணியம் பலராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோல ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story