தமிழகத்திற்கு போக்குவரத்து திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு: பொன். ராதாகிருஷ்ணன்


தமிழகத்திற்கு போக்குவரத்து திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு:  பொன். ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 25 March 2018 5:29 AM GMT (Updated: 25 March 2018 5:29 AM GMT)

தமிழகத்திற்கு போக்குவரத்து திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1.5 லட்சம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சேலம்,

சேலம்-சென்னை இடையேயான விமான சேவையை முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்து உள்ளார்.  இதற்கான விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் தங்கமணி மற்றும் இல.கணேசன் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

விமான சேவை துவக்க விழாவில் கலந்து கொண்ட பொன். ராதாகிருஷ்ணன் கூறும்பொழுது, தமிழகத்திற்கு போக்குவரத்து திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1.5 லட்சம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

சேலத்தில் இருந்து இரவு நேரங்களிலும் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

சேலத்தில் காலை 11 மணிக்கு புறப்படும் விமானம் சென்னைக்கு காலை 11.50 மணிக்கு வந்தடையும்.  இதேபோன்று சென்னையில் காலை 9.50 மணிக்கு புறப்படும் விமானம் சேலத்திற்கு காலை 10.40 மணிக்கு வந்தடையும்.

Next Story