மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைத்தாலும் குழு அமைத்தாலும் தமிழகம் அதை ஏற்க வேண்டும் - தமிழிசை


மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைத்தாலும் குழு அமைத்தாலும் தமிழகம் அதை ஏற்க வேண்டும் - தமிழிசை
x
தினத்தந்தி 27 March 2018 3:04 PM GMT (Updated: 27 March 2018 3:04 PM GMT)

மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமத்தாலும் குழு அமைத்தாலும் தமிழகம் அதை ஏற்க வேண்டும் என தமிழிசை கூறிஉள்ளார். #CauveryManagementBoard #TamilisaiSoundararajan


சென்னை,


காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு இறுதித் தீர்ப்பு அளித்தது. அதில், காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்துள்ள இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்பாக கூறிவிட்டது.

காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைப்பதற் கான திட்டத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். இதை பாராளுமன்றத்திலும், தமிழகத்திலும் பல்வேறு வகைகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள இந்த 6 வாரக் காலக்கெடு, 29-ந் தேதியன்று முடிகிறது. இந்நிலையில் மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது என தகவல் வெளியாகியது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 காவிரி மேலாண்மை வாரியம் ஒன்றுதான் தீர்வு என தமிழகம் தரப்பில் ஸ்திரமாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

 மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற நிலைக்கு கடும் எதிர்ப்பும் எழுந்து உள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக வேறு எந்தஒரு ஆணையத்தையும் ஏற்க முடியாது என திமுக கூறிஉள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை, மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைத்தாலும் குழு அமைத்தாலும் தமிழகம் அதை ஏற்க வேண்டும் என கூறிஉள்ளார். 

அரசியல் நாகரிகம் கருதியே ஸ்டாலினை ஆளுநர் அழைத்து விளக்கம் அளித்துள்ளார் எனவும் குறிப்பிட்டு உள்ளார். 

Next Story