ஐஓபி வங்கி கொள்ளை கைது செய்யப்பட்ட சபின்லால்சந்தை சென்னை கொண்டு வருவதில் சிக்கல்


ஐஓபி வங்கி கொள்ளை கைது செய்யப்பட்ட சபின்லால்சந்தை சென்னை கொண்டு வருவதில் சிக்கல்
x
தினத்தந்தி 29 March 2018 1:44 PM GMT (Updated: 29 March 2018 1:44 PM GMT)

விருகம்பாக்கம் ஐஓபி வங்கி கொள்ளை கைது செய்யப்பட்ட சபின்லால்சந்தை சென்னை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. #IOBBankRobbery #Sabinlal


சென்னை,

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நகை மற்றும் பணம் வைக்கும் 2 லாக்கர்கள் கொள்ளையடிக்கப்பட்டது. 

வங்கி செயல்படும் கட்டிடத்தில் தங்கி காவலாளியாக வேலை செய்து வந்த நேபாளத்தை சேர்ந்த சபின்லால்சந்த் (வயது 45) தனது மகன் திலுவுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தை நடத்தி இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சபின்லால்சந்த் நேபாளத்திற்கு சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தால் ஒரு தனிப்படை போலீசார் விமானம் மூலம் நேபாளம் விரைந்து சென்றனர். இப்போது விருகம்பாக்கம் ஐஓபி வங்கியில் கொள்ளையடித்த காவலாளியை நேபாளத்தில் போலீஸ் கைது செய்து உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. நேபாளத்தில் தலைமறைவாக இருந்த காவலாளி சபிலாலை இன்டர்போல் உதவியுடன் தனிப்படை போலீசார் கைது செய்து உள்ளனர். 

அயல்நாட்டு பிரஜை என்பதால் சபின்லால் சந்தை சென்னை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.  பிடிபட்ட சபீன்லால் நேபாள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். சபின்லாலை இந்தியாவிற்கு கொண்டுவரவும் நடவடிக்கை தொடங்கப்படுகிறது.

இதற்கிடையே கொள்ளை தொடர்பான விரிவான விசாரணையும் போலீஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Next Story