காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் டாக்டர் ராமதாஸ் வீட்டில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் டாக்டர் ராமதாஸ் வீட்டில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது
x
தினத்தந்தி 30 March 2018 10:15 PM GMT (Updated: 30 March 2018 9:21 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி டாக்டர் ராமதாஸ் வீடு உள்பட பா.ம.க.வினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

திண்டிவனம், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடு முடிந்த பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலி யுறுத்தியும் தமிழகம் முழு வதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு செய்த துரோகத்தை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் முதல் கட்டமாக 30-ந் தேதி முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்தை நடத்தும்படி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று காலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீடு மற்றும் பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

இதேபோல் தமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக் கோவிலூர், திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூர், கள்ளக் குறிச்சி மற்றும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் தங்களது வீடுகளில் நுழைவுவாயில் முன்பு கருப்பு கொடியை ஏற்றிவைத்து மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

Next Story