காவிரி வாரியத்துக்காக மெரினாவில் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிப்பு


காவிரி வாரியத்துக்காக  மெரினாவில் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிப்பு
x
தினத்தந்தி 31 March 2018 3:18 PM GMT (Updated: 31 March 2018 5:20 PM GMT)

காவிரி வாரியத்துக்காக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். #CauveryManagementBoard

சென்னை, 

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை  அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினாவில்  இன்று மாலை இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்திய வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினாவில் போராட்டம் நடைபெறுவதாக வெளியான தகவல் சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீயாக பரவியது. இதற்கிடையில், தடையை மீறி சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பெண்கள் 5 பேர் உட்பட 18 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  இந்த நிலையில், கைதான 18 பேரையும் சொந்த ஜாமீனில் காவல்துறையினர் விடுவித்துள்ளனர். 

Next Story