பெட்ரோல் பங்குகள் இன்று திறந்து இருக்கும்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு


பெட்ரோல் பங்குகள் இன்று திறந்து இருக்கும்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 April 2018 1:13 AM GMT (Updated: 3 April 2018 1:13 AM GMT)

பெட்ரோல் பங்குகள் இன்று திறந்து இருக்கும் என்று பெட்ரோல் பங்குகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. #Cauveryissue

சென்னை, 

காவிரி பிரச்சினைக்காக ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்தவர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளனர். 

இந்த நிலையில், பெட்ரோல் பங்குகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகள் நாளை(இன்று) திறந்து இருக்கும். அனைத்து கட்சிகள் சார்பாக 5-ந் தேதி நடத்தும் முழு அடைப்பில் பங்கேற்பது குறித்து நாளை(இன்று) மாலை முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்து உள்ளார்.


Next Story