விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற தினகரன், அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன்- 5000 பேர் கைது


விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற தினகரன், அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன்- 5000 பேர் கைது
x
தினத்தந்தி 3 April 2018 7:04 AM GMT (Updated: 3 April 2018 7:04 AM GMT)

திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற தினகரன், அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 5000-க்கும் மேற்பட்டோர் கைது. #CauveryManagementBoard #TTVDhinakaran #PRPandian

திருச்சி

உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறிய  பிறகும் காவிரி மேலாண்மை  வாரியம் அமைக்காத  மத்திய  அரசை கண்டித்து  இன்று (3-ந்தேதி) திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டமும் விமானத்தை மறிக்கும்    போராட்டமும் நடைபெறும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு அறிவித்தார். இந்த    போராட்டத்தில் விவசாயிகளுக்கு  ஆதரவாக அம்மா  மக்கள்  முன்னேற்ற கழகம் பங்கேற்கும் என்று அதன் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்து இருந்தார்.

அதன்படி  இன்று  காலை திருச்சி  விமான நிலையம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர்  மற்றும்  அம்மா  மக்கள் முன்னேற்ற கழகத்தினர் குவிந்தனர்.  சுமார்  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு அய்யாக்கண்ணு தலைமையில் விமான நிலைய பழைய முனையம்  அருகே மத்திய  அரசுக்கு  எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் விவசாயிகள் திடீரென விமான  நிலையம் எதிரே சாலையில் அமர்ந்தும், படுத்தும் மறியலில்  ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து    கடுமையாக பாதிக்கப்பட்டது. 

திருச்சி விமான நிலையத்திற்கு கட்சி தொண்டர்கள் படைசூழ  டி.டி.வி.தினகரன், தமிழக அனைத்து  விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மன்னார்குடி ரெங்கநாதன் ஆகியோர் திருச்சி  விமான நிலையத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது அங்கு  பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.   தினகரன்,  அய்யாக்கண்ணு  மற்றும்  விவசாயிகள்  சங்கம்,  அம்மா மக்கள் முன்னேற்ற  கழக  நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட சுமார் 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story