தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் கோயம்பேடு மார்க்கெட் வெறிச்சோடியது


தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் கோயம்பேடு மார்க்கெட் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 3 April 2018 7:11 AM GMT (Updated: 3 April 2018 7:11 AM GMT)

தமிழகம் முழுவதும் வணிகர் சங்கங்கள் பேரமைப்பு இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தியது கோயம்பேடு மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டன.

சென்னை, 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்கள் பேரமைப்பு அறிவித்தது.  அதன்படி தமிழகம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டது. 

சென்னையில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் முழுவதும் மூடப் பட்டு இருந்தது. இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் கோயம்பேடு மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. வெளியூர்களில் இருந்து காய்கறி, பழங்கள் ஏற்றி வந்த லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. 

சென்னை நகரில் முக்கிய பகுதிகளான தி.நகர், புரசை வாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஓட்டல்கள் உள்பட  பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. மருந்து கடைகளும் மூடப்பட்டன. அதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்து வழக்கம் போல இருந்தாலும், கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மதுரையில் முக்கிய பகுதியான விளக்குத்தூண், மேலமாசி வீதி, கீழமாசி வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வியாபாரிகள்  கடைகளை அடைத்து மத்திய அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள சென்ட்ரல் மார்க்கெட்டிலும் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. 

திருச்சி மாவட்டத்தில் 90 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன.  திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,500 மருந்து கடைகள், 4 ஆயிரம் ஓட்டல்கள், ஜவுளி நிறுவனங்கள்,    பர்னிச்சர் கடைகள்,   காய்கறி,   அரிசி, பருப்பு,  எண்ணை,  மளிகை கடைகள், ஷாப்பிங் மால்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி கிடந்தன. இது தொடர்பாக முன்கூட்டியே போஸ்டர்கள்  ஒட்டப்பட்டிருந்தன. இதனால் திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் இன்று 100 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. 

எம்.ஜி.ஆர். மார்க்கெட், தியாகி குமரன் மார்க் கெட், உக்கடம் ராமர் கோவில் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து மார்க் கெட்டுகளிலும் மளிகை கடைகள் மூடப்பட் டிருந்தன. ஆனால் ஒரு சில காய்கறி கடைகள் திறந்திருந்தன. உக்கடத்தில் பழக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. 

ரெயில் நிலையம் அருகே  உள்ள ஒரு சில கடைகள், பேக்கரிகள் திறந்திருந்தன. பொள்ளாச்சி, பெரியநாயக் கன்பாளையம், துடியலூர், மதுக்கரை, அன்னூர், வால் பாறை உள்பட மாவட் டத்தின்  பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன.  

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஊட்டி நகரில் அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தது. மார்க்கெட்டும் செயல்படவில்லை. ஓட்டல்கள், சாலையோர கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. குமரி மாவட்டத்தில் 70 சதவீதம் கடைகள் 
அடைக்கப்பட்டு இருந்தன.

Next Story