வேலூர் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்


வேலூர் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 5 April 2018 11:00 PM GMT (Updated: 5 April 2018 10:37 PM GMT)

வேலூர் மாவட்டம் சோழிங்கர் தபால்நிலைய தெருவில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். போலீஸ் விசாரணையில் இறந்து கிடந்தவரின் பெயர் ராஜாராம் என்றும், குடும்பத்தை பிரிந்து தனியாக சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.

சென்னை,

இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு பிணத்தை போலீசார் எடுத்து சென்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்பு அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்துக்கு பேரூராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான குப்பை வண்டியில் பிணம் எடுத்துச் செல்லப்பட்டது. 3 சக்கர சைக்கிள் போன்ற அந்த வண்டியில் வெள்ளைத்துணியால் சுற்றப்பட்டுள்ள பிணத்தின் ஒரு பகுதி வெளியே நீட்டிக்கொண்டு இருக்கிறது.

இதுகுறித்த செய்தி படத்துடன் பத்திரிகைகளில் வெளியானது. இந்த செய்தியை சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கை விசாரித்த ஆணைய நீதிபதி மீனாகுமாரி, இந்த விவகாரம் சம்பந்தமாக வேலூர் கலெக்டர், பேரூராட்சிகளின் இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரத்துறை இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Next Story