வேலூர் ஆம்பூர் வயலில் ராணுவ ஹெலிகாப்டர் இறங்கியதால் பரபரப்பு


வேலூர் ஆம்பூர் வயலில் ராணுவ ஹெலிகாப்டர் இறங்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 April 2018 10:21 AM GMT (Updated: 6 April 2018 10:21 AM GMT)

வேலூரில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று தரையிறங்கிய சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று மதியம் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயங்கர சத்துடன் வானில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று அங்குள்ள நிலத்தில் தரையிறங்கியது. 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், விசாரணை நடத்தியதில்,  பெங்களூரில் உள்ள ராணுவ ஹெலிகாப்டரில் எரிபொருள் மற்றும் ஆயில் தீர்ந்ததால், திடீரென்று தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து, ஹெலிகாப்டரில் பயணம் செய்த ராணுவ வீரர்கள், கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story