அவதூறு கருத்து தெரிவித்து வரும் எச்.ராஜா மீது தமிழக அரசு வழக்கு தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார்


அவதூறு கருத்து தெரிவித்து வரும் எச்.ராஜா மீது தமிழக அரசு வழக்கு தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 20 April 2018 12:07 PM IST (Updated: 20 April 2018 12:07 PM IST)
t-max-icont-min-icon

அவதூறு கருத்து தெரிவித்து வரும் எச்.ராஜா மீது தமிழக அரசு வழக்கு தொடரும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Jayakumar

சென்னை

அமைச்சர் ஜெயக்குமார்  சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அவதூறாக கருத்துக்களை தெரிவித்து வரும் எச். ராஜா மீது அரசு வழக்கு தொடரும்; யாருக்கும் தமிழக அரசு வக்காலத்து வாங்காது. எஸ்.வி. சேகர், 
எச்.ராஜா ஆகியோர் இழிவாக பேசிவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது; பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது.

எச்.ராஜா மற்றும் எஸ்.வி. சேகர் இருவரும் சைபர் சைக்கோக்கள். 
இருவருக்கு விளம்பரம் தேடுவதே வேலை. பேராசிரியை விவகாரத்தில் காவல்துறை உண்மை நிலையை வெளிக்கொண்டுவரும், யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை  . பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் உத்தரவிட்டுள்ள விசாரணை, சிபிசிஐடி விசாரணையை பாதிக்காது.

காவிரி விவகாரத்தில் அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு குறித்து மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story