நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் தலைமறைவு?
எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் 4 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர் இந்தநிலையில் அவர் திடீரென தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #SVeShekher #Journalist
சென்னை,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேட்டி அளிக் கும்போது ஒரு பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டியது சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக அந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்ததும், கவர்னரும் இதற்காக வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் இழிவான கருத்துகளை வெளியிட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் நடிகர் எஸ்.வி.சேகருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி வெளியிட்ட கருத்துக்காக எஸ்.வி சேகர் மன்னிப்பு கோரினார். ”மன வருத்தம் ஏற்பட்டுள்ள பத்திரிகை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார்.
இழிவான கருத்துகளை தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது பெண் பத்திரிகையாளர் புகார் கூறியுள்ளார். சென்னை, மதுரை போலீஸ் கமிஷனர்களிடமும் புகார்கள் கொடுக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் 4 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர். பத்திரிகையாளர் பாதுகாப்பு நல சங்கத்தினரின் புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் எஸ்.வி.சேகர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தலைமறைவு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
Related Tags :
Next Story