சென்னையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி தொடங்கியது


சென்னையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி தொடங்கியது
x
தினத்தந்தி 23 April 2018 3:57 AM GMT (Updated: 23 April 2018 3:57 AM GMT)

29வது சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி சென்னையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி தொடங்கியது. #MRVijayaBaskar #Chepauk

சென்னை,

சென்னை சேப்பாக்கத்தில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா பேரணியை போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

இந்த  விழிப்புணா்வு பேரணி சேப்பாக்கத்தில் தொடங்கி பேரணியாக விக்டோாியா போா் சின்னம் வரையிலும்  சென்றது. மேலும் மக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில்  துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

பின்னா் இந்த முக்கிய பேரணியில் ஜெயவா்த்தனன் எம்.பி., மற்றும் ஏ.டி.ஜி.பி. கரண் சின்ஹா ஆகியோரும் கலந்து கொண்டனா். இந்த சாலை பாதுகாப்பு வார விழா 30ம் தேதி வரையிலும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story