புதுவை கால்நடை துறை இயக்குனர் மீது பாலியல் புகார்கள் குவிகின்றன


புதுவை கால்நடை துறை இயக்குனர் மீது  பாலியல் புகார்கள் குவிகின்றன
x
தினத்தந்தி 25 April 2018 10:15 PM GMT (Updated: 25 April 2018 9:07 PM GMT)

புதுவையில் கால்நடை துறை இயக்குனர் மீது மேலும் புகார்கள் குவிந்து வருகின்றன.

புதுச்சேரி,

புதுவை கால்நடை துறை இயக்குனர் பத்மநாபன் மீது அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ள விவகாரம் பூதாகரமாக கிளம்பி உள்ளது. இது குறித்து கலெக்டர் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தி 27 பேரிடம் சாட்சியங்களாக கொண்டு வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

புகாருக்குள்ளான அதிகாரி பத்மநாபன் சாட்சிகளை கலைக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த அதிகாரி மீது மேலும் பலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்து வருகின்றனர். இதனை எல்லாம் ஆதாரத்துடன் சேகரித்த உள்ளூர் புகார்கள் குழுவினர் அதை கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் தலைமை செயலாளரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

கால்நடைதுறை இயக்குனர் பெண் ஊழியர்களிடம் செல்போனில் பேசியதாக சில உரையாடல் பதிவுகள் இணையதளம் மூலம் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

அதிகாரி: ஹலோ

பெண்: ஹலோ சார்

அதிகாரி: என்னம்மா

பெண்: குட் ஆப்டர்நூன் சார்

அதிகாரி: ம்.. வணக்கம்

பெண்: சார் குவாட்டர்ஸ்ல பாம்பு வந்திடுச்சி சார்.

அதிகாரி: ஏன் வந்துச்சு என்ன பாம்பு?

பெண்: பிரவுன் கலர்ல இருந்திச்சி. மேல திட்டு திட்டா இருந்தது சார்.

அதிகாரி: எப்ப பார்த்த?

பெண்: இப்ப தான் சார்

அதிகாரி: வீட்டுக்குள்ள வந்துச்சா?

பெண்: இல்ல. வெளியே சுவர் ஓரமா வந்துட்டு போயிடுச்சி சார்.

அதிகாரி: வீட்டு பக்கத்துல பாம்பு வரத்தான் செய்யும்.

பெண்: என்ன எப்ப சார் டிரான்ஸ்பர் செய்வீங்க.

அதிகாரி: என்னத்தம்மா... நான் போட்டுர்றேன்.

பெண்: சார் இங்க ஆம்பளைங்களே இருக்க பயப்படுறாங்க. என்னை ஒரு பெண்ணை இங்கு வந்து போட்டுட்டீங்க.

அதிகாரி: பக்கத்துல யாரும் இருக்காங்களா?

பெண்: எல்லோரும் சாப்பிட போயிட்டாங்க.

அதிகாரி: என்னம்மா நீ அங்க எப்படி வந்த? என்ன லட்சணமா வந்த?

பெண்: சார் சார்

அதிகாரி: நான் சீக்கிரம் ரெடி பண்றேன்.

பெண்: பாம்பை பார்த்ததில் இருந்து பயமா இருக்கு சார்?

அதிகாரி: நான் எவ்வளவு பாம்பை பார்திருக்கேன். பாம்பு என் கால் மேல்கூட ஏறி போயிருக்குமா

பெண்: பாம்பை பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா?

அதிகாரி: நான் அடுத்த வாரம் அங்கே வாரேன்மா

பெண்: என்ன சார் பாம்ப பிடிக்கதுக்கா வாரிங்க

அதிகாரி: பாம்பையும் பிடிக்கிறேன். உன்னையும் பிடிக்கிறேன்.

பெண்: என்னை எல்லாம் பிடிக்க முடியாது சார்

அதிகாரி: தைரியமா இரு அங்க காவலுக்கு ஆள் போட சொல்றேன். அப்புறம் பேசுறேன்மா.

இவ்வாறு பேசி துண்டித்தார்.

2-வது பெண்

2-வது பெண் ஊழியருடன் நடந்த உரையாடல் விவரம் வருமாறு:-

பெண்: ஹலோ குட் மார்னிங் சார்

அதிகாரி: ...மவளே(கெட்ட வார்த்தை) நான் எப்ப பேசச்சொன்னேன். நீ எப்ப பேசுற?

பெண்: மவுனம்

அதிகாரி: இப்ப மணி என்ன ஆவுது

பெண்: 3.10

அதிகாரி: அய்யோ நேரமாயிடுச்சி நான் தூங்கனும். 4 மணிக்கு எழுந்து போகனும். வேறு என்னம்மா செய்தி?

பெண்: ஆத்மா திட்டத்தில் கூப்பிடுறாங்க சார்?

அதிகாரி: சரி நல்லது செய்யுமா

பெண்: எனக்கு மலையாளம் சரியா வராது சார்?

அதிகாரி: ஏம்மா நான்லாம் ஒரு மாதத்தில மலையாளம் கத்துக்கிட்டு மைக்கில பேசினேன்.

பெண்: மலையாளத்துல எப்படி சார் பேச முடியும்

அதிகாரி: சரி சரி ஏம்மா நீ சாப்டியா?

பெண்: சாப்பிடாச்சு சார்

அதிகாரி: என்ன சாப்ட

பெண்: பொங்கல் செய்து சாப்டேன் சார்.

அதிகாரி: சரி என்ன மறக்க மாட்டியே

பெண்: எப்போதும் மறக்க மாட்டேன் சார்.

அதிகாரி: என்ன மறந்ததால் தான் நீ கஷ்டப்படுகிறாய்? அப்புறம் 4 மணிக்கு பேசுமா நான் ஏற்பாடு செய்கிறேன்.

இவ்வாறு இந்த உரையாடல் முடிவடைந்தது. 

Next Story