தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய அனுமதித்த விவகாரம்: சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவு
குட்கா ஊழல் புகார் வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #HighCourt #GutkhaScam
சென்னை,
குட்கா ஊழல் புகார் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிபிஐ அதிகாரிகள் அடங்கிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக கேட்டிருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் உயரதிகாரிகளை காப்பாற்ற, ஊழல் கண்காணிப்பு கமிஷன் நினைப்பதாகவும் அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் கேட்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு, மாநில உணவு பாதுகாப்பு கமிஷனர், மனுதாரர் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்கள் ஜனவரி 30 ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை ஐகோர்ட், குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. மேலும், தடையை மீறி குட்கா உற்பத்தி, விற்பனை, சந்தையில் கிடைப்பது என அனைத்தையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story