மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டுவிழா மே 7-ம் தேதி நடைபெறுகிறது


மெரினாவில் ஜெயலலிதாவுக்கு  நினைவிடம் அமைக்க  அடிக்கல் நாட்டுவிழா  மே 7-ம் தேதி நடைபெறுகிறது
x
தினத்தந்தி 4 May 2018 3:13 PM GMT (Updated: 4 May 2018 3:13 PM GMT)

சென்னை மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா வரும் மே 7-ம் தேதி நடைபெறுகிறது. #Jayalalithaa

சென்னை,

இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.   காலை 8.30 மணியளவில் அ.தி.மு.க. சார்பில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.  இதில் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொள்ள  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Next Story