6 மாவட்டங்களில் ரூ.16 கோடி மதிப்பில் கட்டிடங்கள் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்


6 மாவட்டங்களில் ரூ.16 கோடி மதிப்பில் கட்டிடங்கள் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 5 May 2018 10:37 PM GMT (Updated: 5 May 2018 10:37 PM GMT)

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் ரூ.16 கோடி மதிப்பிலான கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

சென்னை,

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சியில் ரூ.17 கோடியே 25 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் கூடிய குடிநீர் பகிர்மான குழாய்கள் அபிவிருத்தி பணிகள், ரூ.15 கோடியே 39 லட்சம் மதிப்பிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் கூடிய குடிநீர் பிரதான குழாய்கள் அபிவிருத்தி பணிகள் மற்றும் ரூ.3 கோடியே 43 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் நகராட்சி அலுவலக கட்டிடம் ஆகியவற்றை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலம் திறந்துவைத்தார்.

அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ரூ.16 கோடியே 12 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டிடங்கள், நகராட்சி அலுவலக கட்டிடம், பூங்காங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், துப்புரவு பணியாளர் குடியிருப்புகள் ஆகியவற்றையும் திறந்துவைத்தார். மேலும், ரூ.5 கோடியே 60 லட்சம் செலவிலான 4 எந்திர பெருக்கி வாகனங்களை பெருநகர சென்னை மாநகராட்சி பயன்பாட்டுக்காக வழங்கினார்.

இதேபோல், தொழில் வணிகத்துறையின் சார்பில் கோவை மாவட்டம், ஒண்டிபுதூரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டிலான தாய்கோ வங்கியின் புதிய கிளையினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் திறந்துவைத்தார்.

Next Story