சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க முடியாது -ஜெயக்குமார்


சுப்ரீம் கோர்ட்டில்  கர்நாடக அரசு தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க முடியாது -ஜெயக்குமார்
x
தினத்தந்தி 7 May 2018 6:12 AM GMT (Updated: 7 May 2018 6:12 AM GMT)

தண்ணீர் தரமுடியாது என சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Jayakumar

சென்னை

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வு மையம் வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்டதற்கு முழுக்காரணம் சிபிஎஸ்இ தான். அடுத்தாண்டு எத்தனை பேர் நீட் தேர்வு எழுதினாலும் அனைவருக்கும் தமிழகத்தில் தான் தேர்வு நடக்கும்.

யாரையும் கைது செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை . 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தரப்பட்டது என அவர் குறிப்பிட்டார். நிதிநெருக்கடி இருந்தாலும் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.. அரசு வருமானத்தில் பெரும் பகுதி ஊழியர்களுக்கு தான் சம்பளமாக வழங்கப்படுகிறது. அரசாங்கத்துக்கு வருமானம் வானத்தில் இருந்து கொட்டுவதில்லை .

உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க முடியாது.  உச்சநீதிமன்றம் கூறிய படி காவிரியிலிருந்து கர்நாடகா தண்ணீர் திறந்தே ஆக வேண்டும். கர்நாடகா எந்த அறிக்கை தாக்கல் செய்தாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story