மாவட்ட மகளிர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை


மாவட்ட மகளிர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை
x
தினத்தந்தி 20 May 2018 11:41 AM IST (Updated: 20 May 2018 11:47 AM IST)
t-max-icont-min-icon

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட மகளிர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். #Rajinikanth

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் கடந்த வருடம் டிசம்பர் 31-ஆம் தேதி தனது ரசிகர்கள் முன்னிலையில் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். தனது புதிய கட்சியை 
ஆரம்பிக்க பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் ரஜினிகாந்த் முதற்கட்டமாக கடந்த மே 10-ந் தேதி மாவட்ட அணி செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மே 13-ந் தேதி இளைஞர் அணி மாவட்ட செயலாளர்களுடன் கட்சி தொடர்பாக ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், இன்று மாவட்ட மகளிர் அணி  செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகம், புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் பங்கேற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அனைவரின் கருத்துகளையும் ரஜினி கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Next Story