சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.47க்கும், டீசல் ரூ.71.59க்கும் விற்பனை


சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.47க்கும், டீசல் ரூ.71.59க்கும் விற்பனை
x
தினத்தந்தி 21 May 2018 3:35 AM GMT (Updated: 21 May 2018 3:35 AM GMT)

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.47க்கும், டீசல் ரூ.71.59க்கும் விற்பனையாகி வருகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஓராண்டாக தினசரி அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 4 வாரங்களாக ஏறுமுகமாக உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்று உயர்த்தப்பட்டது.  சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 35 காசு உயர்ந்து ரூ.79.13 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது.  இதேபோன்று ஒரு லிட்டர் டீசல் விலையானது 28 காசு உயர்ந்து ரூ.71.32 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனையானது.

இந்நிலையில், இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து உள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 34 காசு உயர்த்தப்பட்டு ரூ.79.47 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஒரு லிட்டர் டீசல் விலையானது 27 காசு உயர்ந்து ரூ.71.59 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.

இதனால் பெட்ரோல் விலை ரூ.80ஐ நெருங்கி வருகிறது.  வாகன ஓட்டிகள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.  கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.55 ஆக இருந்தது.

Next Story