ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 12 ஆக உயர்வு


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 12 ஆக உயர்வு
x
தினத்தந்தி 23 May 2018 3:47 PM GMT (Updated: 23 May 2018 4:05 PM GMT)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது. #SterliteProtest

தூத்துக்குடி,

 தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் நேற்று நடைபெற்ற கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் கலவரமாக வெடித்தது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 10-ம் வகுப்பு மாணவி உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர். தூத்துக்குடியில் இன்று 2–வது நாளாக கலவரம் நீடித்தது. அண்ணாநகர் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் காளியப்பன் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. 

இதற்கிடையே துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது. காயம் அடைந்த 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

Next Story