இணையதள சேவைகள் முடக்கம்: கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் திருநாவுக்கரசர் கண்டனம்


இணையதள சேவைகள் முடக்கம்: கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் திருநாவுக்கரசர் கண்டனம்
x
தினத்தந்தி 24 May 2018 7:00 PM GMT (Updated: 24 May 2018 6:34 PM GMT)

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இணையதள சேவைகளை அரசு நிறுத்தி வைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

சென்னை, 

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக காவல்துறையால் நடத்தப்பட்ட கண்டனத்திற்குரிய துப்பாக்கிச் சூட்டினையும், ஏற்பட்ட பிரச்சினைகளையும் ஒட்டி தென்மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இணையதள சேவைகளை அரசு நிறுத்தி வைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

தாசில்தார் அலுவலகம் தொடங்கி, கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் சேருவதற்கு இணையதளத்தின் மூலமாகவே மனுக்கள் செய்யவும், சான்றிதழ்கள் பெற வேண்டிய கட்டாயத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ள நிலையில் இணையதள சேவைகளை நிறுத்தி வைத்திருப்பது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உரிய காலத்தில் விண்ணப்பங்கள் அனுப்பவோ, சான்றிதழ்கள் பெறவோ முடியாத நிலை ஏற்படும். கருத்து சுதந்திரத்திற்கும் இது எதிரான செயலாகும். உடனடியாக இணையதள சேவைகளின் தடையை பொதுமக்கள் நலன்கருதி நீக்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story