அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்ஜினீயரிங் தேர்வுகள் தள்ளிவைப்பு


அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்ஜினீயரிங் தேர்வுகள் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 24 May 2018 7:22 PM GMT (Updated: 24 May 2018 7:22 PM GMT)

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற என்ஜினீயரிங் கல்லூரிகளில் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

சென்னை,

அண்ணாபல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம்.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற என்ஜினீயரிங் கல்லூரிகளில் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இன்று (25-ந் தேதி) நடைபெற இருந்த தேர்வுகள் ஜூன் 5-ந் தேதியும், நாளை(26-ந் தேதி) நடக்க இருந்த தேர்வுகள் ஜூன் 6-ந் தேதிக்கும், 28-ந் தேதி(திங்கட்கிழமை) நடைபெற இருந்த தேர்வுகள் ஜூன் 7-ந் தேதிக்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

வருகிற 29-ந் தேதி முதல் நடைபெற உள்ள தேர்வுகள் முன்பு அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

Next Story