சமயபுரம் கோவில் யானை மதம் பிடித்து மிதித்ததில் பாகன் பலி


சமயபுரம் கோவில் யானை மதம் பிடித்து மிதித்ததில் பாகன் பலி
x
தினத்தந்தி 25 May 2018 6:22 AM GMT (Updated: 25 May 2018 6:26 AM GMT)

திருச்சி சமயபுரம் கோவில் யானை மதம் பிடித்து மிதித்ததில் யானை பாகன் உயிரிழந்தார்.

சமயபுரம்,

திருச்சி சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்ததால் பக்தா்கள் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா்.  

இதைத்தொடர்ந்து மதம் பிடித்த திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மிதித்ததில் யானை பாகன் உயிரிழந்தார். மதம் பிடித்த யானை தாக்கியதாலும், அலறியடித்து பக்தா்கள் ஓடியதாலும் 8 போ் காயமடைந்தனா். மேலும், அந்த பெண் யானை மசினி தூக்கி வீசியதில் 2 போ் கவலை கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,  சமயபுரம் மாரியம்மன் கோவிலின்  நடைச் சாத்தப்பட்டது. பக்தா்கள் அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Next Story