சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் 3 வகை இனிப்புகள் கொடுக்கப்பட்டது பரப்பரப்பு தகவல்
சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் 3 வகை இனிப்புகள் பழச்சாறுடன் வழங்கப்பட்டதாக அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த உணவுபட்டியலில் தகவல்.#Jayalalithaa #JayalalithaaDeath
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் டிரைவர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.
அந்த வகையில் இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் ஜூன் 2-ந்தேதிக்கு விசாரணை ஆணையத்தில் மீண்டும் ஆஜராகுமாறு அனுப்பி விட்டனர்.
ஜெயலலிதாவின் சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். இவரை தொடர்ந்து ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த ராமலிங்கம், பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், குடும்ப டாக்டர் சிவக்குமார், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்கள்.
இவர்கள் ஒவ்வொருவரிடமும் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது அவரை யார்-யார் பார்த்தார்கள். அங்கு யார் கட்டுப்பாட்டில் நிர்வாகம் நடந்தது என்பது உள்பட பல்வேறு தகவல்களுக்கு விளக்கங்கள் கேட்கப்பட்டன.
இந்த நிலையில் சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் 3 வகை இனிப்புகள், அவ்வப்போது பழச்சாறுடன் கூடிய மில்க் ஷேக் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த உணவு பட்டியல் மூலம் இது தெரியவந்துள்ளது.
2016 நவ. 22-ம் தேதி மதியம் லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா ஆகிய இனிப்பு பலகாரங்களை உட்கொண்டதும் தெரியவந்தது.
2016 டிச. 2, 3-ம் தேதிகளில் ஆப்பிள், ஸ்ட்ராபெரி, வாழைப்பழம் மில்க் ஷேக் வகைகளை ஜெயலலிதா உட்கொண்டார் என அறிக்கையில் தகவல் கூறபட்டு உள்ளது.
Related Tags :
Next Story