சென்னை அசோக்பில்லர் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் திடீா் தீ விபத்து


சென்னை அசோக்பில்லர் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் திடீா் தீ விபத்து
x
தினத்தந்தி 2 Jun 2018 10:01 AM GMT (Updated: 2 Jun 2018 10:01 AM GMT)

சென்னை அசோக்பில்லர் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் மின் கசிவு காரணமாக திடீா் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. #AshokNagar #FireAccident

சென்னை: 

சென்னையில் அசோக்பில்லர் அருகே  அமைந்துள்ள வணிக வளாக கட்டிடத்தின் 2ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த திடீா் தீ விபத்து காரணமாக தீயணைப்பு வீரா்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனா்.

இதைத்தொடா்ந்து இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக தான் நடந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,  தீப்பிடித்த கட்டிடத்தில் உள்ளவா்களை வெளியேற்றும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இந்த நிலையில் தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனா். 

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story