நான் ஒரு தலைவன் அல்ல, தனி மனிதன் - பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு அழகிரி நன்றி


நான் ஒரு தலைவன் அல்ல, தனி மனிதன் - பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு அழகிரி நன்றி
x
தினத்தந்தி 7 Sep 2018 10:21 AM GMT (Updated: 7 Sep 2018 10:21 AM GMT)

முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு மு.க.அழகிரி நன்றி தெரிவித்துள்ளார். #MKAlagiri

மதுரை

கருணாநிதியின் 30-ஆம் நாள் அஞ்சலிக்காக நடத்தப்பட்ட பேரணிக்கு வந்திருந்த அத்தனை கழக உடன்பிறப்புகளுக்கும் நன்றி என்று முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரி ஒரு  அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அழகிரி கூறி இருப்பதாவது:-

முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு அழகிரி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில்,  கலைஞரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே, நான் ஒரு தலைவன் அல்ல, தனி மனிதனாக, தொண்டனாக என் வேண்டுகோளை ஏற்று கருணாநிதியின் 30-வது நினைவுநாளில் அஞ்சலி செலுத்த அலைகடலென திரண்டு வந்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story