தூத்துக்குடி பொறுப்பு கழக தலைவராக டி.கே.ராமச்சந்திரன் நியமனம்


தூத்துக்குடி பொறுப்பு கழக தலைவராக டி.கே.ராமச்சந்திரன் நியமனம்
x
தினத்தந்தி 23 Sep 2018 10:15 PM GMT (Updated: 23 Sep 2018 9:28 PM GMT)

தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழக தலைவராக டி.கே.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக இருந்த அவர் இந்தப் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை,

கோவில் சிலை திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இந்து சமய அறநிலையத்துறை சிக்கியுள்ள நிலையில், அதன் ஆணையராக இருந்த ஜெயா சமீபத்தில் மாற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து, டி.கே.ராமச்சந்திரன் இந்து சமய அறநிலையத்துறையின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழக தலைவராக டி.கே.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பணி நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு அண்மையில் வழங்கியுள்ளது. அந்தப் பதவியில் அவர் பொறுப்பேற்கும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் நீடிப்பார்.

1991-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக டி.கே.ராமச்சந்திரன் தேர்வானார். கர்நாடக இசை வாய்ப்பாட்டு கலைஞரான அவர், ஒவ்வொரு மார்கழி மாத இசைக் கச்சேரியிலும் பாடி வருகிறார். தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராகப் பணியாற்றி வந்த அவர், அண்மையில்தான் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

அந்தப் பதவியில் அவர் ஓரிரு வாரங்கள் இருந்த நிலையில், தூத்துக்குடி துறைமுகப் பொறுப்பு கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது காலியாக உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதவிக்கு யார் புதிதாக நியமிக்கப்படுவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story