83-வது பிறந்த நாள்: பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர்தூவி மரியாதை


83-வது பிறந்த நாள்: பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர்தூவி மரியாதை
x
தினத்தந்தி 24 Sep 2018 11:30 PM GMT (Updated: 24 Sep 2018 8:27 PM GMT)

83-வது பிறந்தநாளையொட்டி, பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் அரசியல் கட்சியினர், தமிழ் ஆர்வலர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

சென்னை, 

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 83-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்துக்கு ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாலதி சிவந்தி ஆதித்தன், ‘மாலைமலர்’ இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன், ஜெயராமையா, அனிதா குமரன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர், ‘தினத்தந்தி’, ‘மாலைமலர்’, ‘தந்தி டி.வி.’, ‘டி.டி. நெக்ஸ்ட்’, ‘ஹலோ எப்.எம்.’, ‘ஏ.எம்.என். டி.வி.’, ‘ராணி’, ‘ராணி முத்து’, ‘ராணி பிரிண்டர்ஸ்’, ‘கெய் டிராவல்ஸ்’, ‘இந்தியா கேப்ஸ்’, ‘சுபஸ்ரீ’, ‘கோகுலம் கதிர்’ ஊழியர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

மேலும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

அரசியல் கட்சிகள்

அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, கே.பாண்டியராஜன், கலைப்பிரிவு மாநில செயலாளர் உதயக்குமார், இணை செயலாளர் நாஞ்சில் பி.சி. அன்பழகன், வட சென்னை மாவட்ட துணை செயலாளர் ஆர்.எம்.டி.ரவீந்திரஜெயன், இலக்கிய அணி மாநில இணை செயலாளர் இ.சி.சேகர், ரெட்சன் சி.அம்பிகாபதி, அம்பத்தூர் நகர ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் எம்.என்.இளஞ்செழியன்.

தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி, அவரது தாயாரும், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியாருமான ராஜாத்தியம்மாள், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம், பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துசோழன், தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர் எஸ்.ஜோயல், தி.மு.க. நெல்லை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஆர்.பி. முருகன் ராஜா, தி.மு.க. மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர், தென் சென்னை மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் இம்மானுவேல், நெல்லை கிழக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஆரோக்கிய எட்வின், ஆர்.கே.நகர் பகுதி முன்னாள் செயலாளர் ஏ.டி.மணி.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தேர்தல் பணி துணை செயலாளர் பூங்காநகர் ஆர்.ராமதாஸ், பா.ஜ.க. மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், துணைத்தலைவர் கரு.நாகராஜன், எம்.என். ராஜன், அரசக்குமார், விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், வட சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் வன்னியராஜன், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.ஆர்.ராமையா, வணிகர் பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் நாக ராஜன், குன்றத்தூர் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கார்த்திக்கேயன், வர்த்தக அணி மாவட்ட தலைவர் பட்டுராமசுந்தரம், தே.மு.தி.க. வர்த்தக அணி செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.சந்திரன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் சேவியர்.

முன்னாள் மத்தியமந்திரி ஜெயந்தி நடராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், பொருளாளர் நாசே ராமச்சந்திரன், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.தாஸ், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர்கள் வேலு தேவர், சூளை ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் ஜி.தமிழ்செல்வன், நாச்சிக்குளம் சரவணன், வர்த்தக காங்கிரஸ் மாநில செயலாளர் மாம்பலம் எஸ்.ராஜேந்திரன், தலைமை நிலைய செயலாளர் ராமசாமி.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், துணை பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, எஸ்.எஸ்.பாலாஜி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம், செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், இணை பொதுச்செயலாளர் ஆர்.டி. சேதுராமன்.

த.மா.கா. மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணைத்தலைவர் கோவைத்தங்கம், மாவட்ட செயலாளர் கொட்டிவாக்கம் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் சிவபால், வர்த்தகர் அணி மாநிலத்தலைவர் ஆர்.எஸ்.முத்து, தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் கலைராஜன், வெற்றிவேல்.

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொருளாளர் எம்.கண்ணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் என்.ஆர்.டி. பிரேம்குமார், மாநில கொள்கை பரப்பு செயலாளர் பாலாஜி, செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், வட சென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், தலித் முன்னேற்ற கழக தலைவர் அன்பின் பொய்யாமொழி.

நாடார் சங்கங்கள்

சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து, பொருளாளர் கே.பி.பி.பூமிநாதன், செயலாளர் செல்லதுரை, துணைத்தலைவர் எம்.ஏ.திரவியம், திருநெல்வேலி தெட்சிணமாற நாடார் சங்க மும்பை கிளை தலைவர் ராமராஜா. இந்திய நாடார்கள் கூட்டமைப்பு துணைத்தலைவர் டி.ராஜ்குமார். நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தலைவர் வெ.த.பத்மநாபன். நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் கு.சுந்தரேசன். சென்னை நாடார் சங்க செயலாளர் டி.விஜயகுமார், துணைத் தலைவர் எம்.பூப்பாண்டியன், துணைச்செயலாளர் என்.கே.என்.ராஜா.

தமிழ்நாடு நாடார் சங்க மாநில தலைவர் முத்து ரமேஷ், மாநில துணை பொதுச்செயலாளர் மார்க்கெட் ராஜா, காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் வி.எல்.சி. ரவி, சென்னை கள்ளிகுளம் நாடார் சங்கத் தலைவர் என்.ஏ.தங்கதுரை, செயலாளர் ஏ.ஜூலியஸ், வண்ணாரப்பேட்டை நாடார் சங்க தலைவர் ராஜன், பொருளாளர் ராஜேஷ், சத்திரிய நாடார் இயக்க தலைவர் சந்திரன் ஜெயபால், பொருளாளர் குணசீலன், கூடுதல் பொதுச்செயலாளர் மாரித்தங்கம், துணைத் தலைவர்கள் எஸ்.ஆர்.பி. ராஜன், இமானுவேல். சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் சிதம்பரம், அகில இந்திய நாடார் சக்தி தலைவர் விஜயா சந்திரசேகர்.திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் ஆர்.எஸ்.பி.ராஜகோபால், பொதுச்செயலாளர் சி.திருப்புகழ், பொருளாளர் எஸ்.சிங்கராயர். பெரம்பூர் நாடார் சங்க செயலாளர் செல்வம், பொருளாளர் தாமோதரன், சென்னை, புறநகர் நாடார்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் த.ரவி, பொதுச்செயலாளர் எம்.ஜெயசங்கர், பொருளாளர் டி.ஜெயமணி, துணை தலைவர் டி.லூர்துராஜ், இணைச் செயலாளர் பி.பொன்.சேகர்.

நந்தம்பாக்கம் நாடார் சங்க தலைவர் கணேசன், பொருளாளர் லட்சுமணன், துணைத் தலைவர் தங்கராஜ், நெற்குன்றம் நாடார் சங்க செயலாளர் முத்துராமன், சென்னை வாழ் கொளத்தூர் இந்து நாடார் உறவின் முறை சங்க தலைவர் தாமஸ், ஆலோசகர் பச்சையப்பன், அனியாப்பூர் நாடார் சங்க தலைவர் தங்கவேல், பொருளாளர் மனோகரன், துணைத் தலைவர் மு.அமல்நாதன். நெற்குன்றம் நாடார் சங்க செயலாளர் கே.முத்துராமன். ஆலந்தூர் நாடார் வட்டார சங்க தலைவர் பி.கணேசன், துணைத் தலைவர் ஜி.தங்கராஜா, பொருளாளர் சி.லட்சுமணன். சேலம் நாடார் சங்க துணைச் செயலாளர் மாடசாமி, நாடார் மக்கள் சக்தி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார்.

தமிழ்நாடு நாடார் சங்க மாநில இளைஞரணி தலைவர் மணிமாறன், வட சென்னை மாவட்ட தலைவர் கார்த்திக், வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் மகேஷ் காமராஜ், அகில இந்திய இந்து நாடார் அறக்கட்டளை தலைவர் நாகராஜன், மீஞ்சூர் வட்டார நாடார் உறவினர் முறை தலைவர் எம்.ஏ.திரவியம், சென்னை நாடார் நண்பர்கள் சங்க தலைவர் ஆனந்தராஜ், செயலாளர் ஜெயமுருகன், பொருளாளர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் கே.எஸ்.எம்.கார்த்திக்கேயன், வியாசை சுற்று வட்டார நாடார் இளைஞர் பேரமைப்பு தலைவர் கனகராஜ், செயலாளர் ராஜமூர்த்தி, பொருளாளர் பொன்ராஜ், துணைத்தலைவர் தவசி ராஜன், துணை செயலாளர் சக்திவேல், காட்டுப்பாக்கம் வட்டார நாடார் நலச்சங்க தலைவர் உதயசங்கர், செயலாளர் வைரவன், பொருளாளர் முருகன், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சென்னை மண்டல தலைவர் செல்வராஜ், காட்டுப்பாக்கம் வட்டார பெருந்தலைவர் காமராஜர் நாடார் நலச்சங்க பொதுச்செயலாளர் கார்த்திக்கேயன், சென்னை வாழ் சோழபுரம் நாடார் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இனாம்கரிசல்குளம் நாடார் உறவின் முறை துணை செயலாளர் விஜய குமார், சென்னை வாழ் போடுபட்டி நாடார் சங்க தலைவர் செயலாளர் செந்தில் குமார், பட்டுமேடு நாடார் சமூக ஐக்கிய சங்க தலைவர் டி.பி. செல்வராஜ், செயலாளர் அருணாசல மூர்த்தி, பொருளாளர் ஜெயராஜ், ஆலோசகர் வெள்ளைச்சாமி,

சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம்

தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில பொருளாளர் எம்.நசீர் அகமது, மாநில துணை பொதுச் செயலாளர்கள் எஸ்.வி.முத்துப்பாண்டியன், பால-முனியப்பன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் காயல் இளவரசு, தென்காசி பீர்முகமது, தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன் ஆதித்தன், நெல்லை மாவட்ட செயலாளர் எம்.தோப்பு மணி, தென்சென்னை மாவட்ட தலைவர் எம்.இந்துநாதன், துணை செயலாளர் ஏ.ஊதான்ஸ், மத்திய சென்னை மாவட்ட துணைச் தலைவர் ஆர்.எஸ்.நாசர், கோடம்பாக்கம் மன்ற தலைவர் முருகேசன், திருவொற்றியூர் நகர மன்ற தலைவர் டி.முல்லைராஜா, முல்லை டி.ஆர்.பிரைட்டன், கடலூர் மன்ற தலைவர் பெப்சி முருகன், ஆயுட்கால உறுப்பினர் சத்திய நாராயணன்.

அணியாப்பூர் மன்ற அமைப்பாளர் ராஜகோபால், திருச்சி புறநகர் மாவட்ட நற்பணி மன்ற துணை செயலாளர் செல்வம், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் விளையாட்டுக்குழு தலைவர் சாமிநாதன், செயலாளர் சீனிவாசன். அயனாவரம் தலைவர் ஜெகதீஷ் சவுந்தர் முருகன், துணைத்தலைவர் விஸ்வநாதன், அசோக்நகர் கிளை செயலாளர் அருணாசல பாண்டியன், பொருளாளர் சுந்தரமூர்த்தி,தொழில் அதிபர்கள்-அமைப்புகள்

பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழிலதிபர்கள் வி.ஜி.சந்தோசம், தண்டுபத்து ஜெயராமன், டி.சி.ராஜகுமார், சபேஷ் ஆதித்தன், மயிலை சந்திரசேகர், பெரிஸ் பிஸ்கெட் பி.மகேந்திரவேல், சிதம்பரம் டி.சி. ராஜாகுமார், ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. ஜான் நிக்கல்சன், டாக்டர் கருணாநிதி, எழுத்தாளர் அமுதா பால கிருஷ்ணன், திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம்,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கதுல்லா, துணைத்தலைவர் பி.தங்கபெருமாள், வட சென்னை மாவட்ட செயலாளர் ராபர்ட், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட்டெவலப்பர்ஸ் நிலதரகர்கள் நலச்சங்க அகில இந்திய தலைவர் வி.என்.கண்ணன், தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் இட்லி இனியவன், திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்க தலைவர் கே.சி.ராஜா, அனகாபுத்தூர் வட்டார வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் முத்துலிங்கம், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் சுப்பிரமணி, அனகாபுத்தூர் வியாபாரிகள் சங்க செயலாளர் கணேச பாண்டியன், பொருளாளர் அம்மாசி, பம்மல் மூங்கில் ஏரி வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் கோவில்துரை, ஆலோசகர் பாண்டியன், காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு எஸ்.சுரேஷ். தமிழ்நாடு பனை வளர்ச்சி வாரிய முன்னாள் இயக்குனர் பார்வதி முத்து. பம்பல் அண்ணாநகர் வியாபாரிகள் சங்க தலைவர் சுந்தரபாண்டியன், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநிலத்தலைவர் முத்துகுமார், திருச்செந்தூர் ஓட்டல் உதயம் இண்டர்நேஷனல் அதிபர் ஜே.டி.ஆனந்தராஜ்,

தமிழ்நாடு சி.பா.ஆதித்தனார் சமூக நல சேவை இயக்க நிறுவனத் தலைவர் பி.சி.பச்சைக்கனி, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பண்பாட்டு கழக தலைவர் மணலி என்.மாரிமுத்து, பொருளாளர் சமுத்திரபாண்டியன், தமிழன்னை கலை மன்ற செயலாளர் ரவி, ஆதித்தனார் முரசு நிறுவனத் தலைவர் கணேசா. முன்னாள் எம்.எல்.சி. கடலூர் எல்.ஜெயச்சந்திரன், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபாவின் கணவர் மாதவன்.

சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் பால் கனகராஜ், செய்தி தொடர்பாளர் பாக்கியராஜ், வக்கீல்கள் இரா.சிவசங்கரன், எஸ்.சபீதா, மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி ஆலய தலைவர் தங்கபெருமாள், மா.பொ.சி.மகள் மாதவி பாஸ்கரன், கிராமணி குல முன்னேற்ற கழக நிர்வாகிகள் சக்கரவர்த்தி, ரவி. அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தேசிய தலைவர் பா. இசக்கிமுத்து, மாநிலத் தலைவர் மணி அரசன், காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளை மருத்துவமனையின் அறங்காவலர் சேக் சதக்கத்துல்லா, தமிழ்நாடு இளைஞர்கள் சங்க மாநிலத்தலைவர் மதன், வட சென்னை தமிழ்ச்சங்க தலைவர் இளங்கோ, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற வட சென்னை மாவட்ட துணை செயலாளர் ஏ.வி.சந்துரு, சென்னை பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் திருப்பதி, பொருளாளர் புவனேஷ்வரன், மாநில ஆலோசகர் வைரராஜன், கொள்கை பரப்பு செயலாளர் கீர்த்தி ராஜன், அகில பாரத பெருந் தலைவர் காமராஜர் மக்கள் நற்பணி இயக்க பொதுச்செயலாளர் மதனவேல்ராஜன், மகளிரணி தலைவர் சுந்தர மீனாட்சி, உடற்பயிற்சி நிபுணர் ஏ.சிதம்பரம், தமிழ்நாடு பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்றம் பொதுச்செயலாளர் கே.எஸ்.சந்தானம், தமிழ்நாடு ஏழை, எளியோர் நடுத்தர மக்கள் நல சங்க மாநிலத்தலைவர் லிங்கபெருமாள், அகில இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கழக தலைவர் முத்துராமன்.

விளையாட்டு சங்கங்கள்

தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் சித்திரை பாண்டியன், கடற்கரை கைப்பந்து சங்க தலைவர் மார்டின் சுதாகர், இந்திய கைப்பந்து சம்மேளன முன்னாள் பொதுச்செயலாளர் கே.முருகன். டாக்டர் சிவந்தி வாலிபால் பவுண்டேசன் பயிற்சியாளர் கேசவன். கோவை சிவந்தி ஆதித்தனார் கைப்பந்து பயிற்சி மைய பயிற்சியாளர் ஸ்ரீதரன், திருவள்ளூர் ராஜ் சிலம்பக் கூடம், தமிழ்நாடு தற்காப்புக் கலை வீரர்கள் சங்க தலைவர் கராத்தே சந்துரு, பயிற்சியாளர் பிரபாகரன், சிலம்பாட்டக்குழு வளர்மதி தலைமையில் மாணவ-மாணவிகள் வந்திருந்து மரியாதை செலுத்தினர்.

நலத்திட்ட உதவி

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்திய நாடார்கள் கூட்டமைப்பு துணை தலைவரும், மெர்க்கண்டைல் வங்கியின் முன்னாள் இயக்குனருமான டி.ராஜ் குமார் ஏற்பாட்டில் 5 பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள், 13 பெண்களுக்கு தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டன.

கடலூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் அமுதன் வளர்மதி தன்னுடைய மகன் மணிகண்டன் மருமகள் கவுசல்யா ஆகியோரை அழைத்து வந்திருந்தார். மணிகண்டனின் குழந்தைக்கு தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், கவிஷ் என்று பெயர் சூட்டினார். ‘ஜானி, ஜானி எஸ் பாப்பா’ படத்தின் இயக்குனர் சுரேஷ், கதாநாயகன் பிரின்ஸ் ஆகியோர் படத்தின் டைட்டிலை காட்டி வாழ்த்து பெற்றனர்.

Next Story