114-வது பிறந்த நாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர்கள், தலைவர்கள் மரியாதை


114-வது பிறந்த நாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர்கள், தலைவர்கள் மரியாதை
x
தினத்தந்தி 27 Sep 2018 11:30 PM GMT (Updated: 27 Sep 2018 8:53 PM GMT)

சி.பா.ஆதித்தனாரின் 114-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சென்னை, 

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 114-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள அவரது முழு உருவச் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

‘மாலைமுரசு’ நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘மாலைமலர்’ இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், அவரது சகோதரர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், கோகுலம் கதிர், ஏர் மீடியா நெட் ஒர்க், சாப் இங்க்ஸ், இந்தியா கேப்ஸ், கெய் டிராவல்ஸ், இன்டர்பிரஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி. ஊழியர்கள் மற்றும் மாலைமுரசு, மாலைமுரசு டி.வி., தேவியின் கண்மணி, தேவியின் பெண்மணி ஊழியர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை தினத்தந்தி அலுவலகத்துக்கு சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த சி.பா.ஆதித்தனார் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

அ.தி.மு.க.

அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, கே.பாண்டியராஜன் மற்றும் விஜயகுமார் எம்.பி., பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் எம்.பி. பாலகங்கா, அ.தி.மு.க. இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் இ.சி.சேகர், நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், வழக்கறிஞர் அணி வடசென்னை மாவட்ட துணை செயலாளர் ஆர்.எம்.டி.ரவீந்திர ஜெயன், அம்பத்தூர் நகர ஜெயலலிதா பேரவை நகர இணைச் செயலாளர் முகப்பேர் எம்.என்.இளஞ்செழியன், வி.எஸ்.வேல்ஆதித்தன், வேளச்சேரி பகுதி ஜெயலலிதா பேரவை தலைவர் நந்தகுமார்,

தி.மு.க.

தி.மு.க. பிரசாரக்குழு மாநில செயலாளர் சிம்லா முத்துச்சோழன், கவிஞர் காசிமுத்துமாணிக்கம், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை, வர்த்தகர் அணி தென்சென்னை மேற்கு மாவட்ட அமைப்பாளர் பு.இம்மானுவேல், எழும்பூர் தெற்கு பகுதி நிர்வாகி சூளை டி.குப்புசாமி, நிர்வாகிகள் மகேந்திரன், சிவா, வினோத், கருப்பசாமி.

ம.தி.மு.க.-பா.ஜ.க.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மாவட்ட செயலாளர்கள் ஜீவன், சுப்பிரமணி, டி.சி.ராஜேந்திரன், மகேந்திரன், பகுதி செயலாளர் நிசார், தேர்தல் பணி துணைச் செயலாளர் பூங்காநகர் ஆர்.ராமதாஸ், செய்தித் தொடர்பாளர் நன்மாறன்.

பா.ஜ.க. துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், எம்.என்.ராஜன், வர்த்தகர் அணி மாநில தலைவர் ஏ.என்.ராஜாகண்ணன், மாவட்ட தலைவர் எஸ்.பி.பட்டுராம சுந்தரம், வடசென்னை மாவட்ட செயலாளர் கே.நாகராஜன்.

காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், பொதுச் செயலாளர் தாமோதரன், வர்த்தகர் பிரிவு மாநில தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., மாநில துணைத் தலைவர் கொண்டல்தாசன், தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், மத்திய சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் சிவாஜி நாதன், வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் எம்.காஜா முகைதீன், மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவர் ச.ராமலிங்கம், மத்திய சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் சூளை ராஜேந்திரன், மேற்கு சென்னை மாவட்ட துணைத் தலைவர் வி.விஜய், தொகுதி தலைவர் பி.ஆர்.சரவணன். தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தகர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் சக்திவேல், தலைமை நிலைய செயலாளர் எம்.ஜி.ராம்சாமி, காங்கிரஸ் மனித நல சட்ட மைய மாநில துணைத் தலைவர் ஐ.டி.அரசன், சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் எஸ்.மோகனரங்கம், வி.சஞ்சய், சூளை எஸ்.ராமலிங்கம், வி.விஜய், பொதுச் செயலாளர் அக்தர் பாட்சா, பி.ஆர்.சரவணன், வட்டத் தலைவர்கள் அ.செந்தில் ஆறுமுகம், பி.சீனிவாசன், நாச்சிகுளம் சரவணன். காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் பி.செந்தில் குரு.

பா.ம.க.

தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் கோவை தங்கம், தலைமை நிலையச் செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.என்.அசோகன், மாநில செயலாளர் ஜி.கே.தாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் டி.சிவபால், வர்த்தகர் அணி மாநில தலைவர் ஆர்.எஸ்.முத்து, மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திரன், கொட்டிவாக்கம் முருகன், தென்சென்னை வடக்கு மாவட்ட மூத்த துணைத் தலைவர் கே.நேசய்யா, தியாகராயநகர் கனகராஜ்.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, சிவக்குமார், பகுதி செயலாளர் துரைராஜ், சேப்பாக்கம் பகுதி செயலாளர் சுலைமான்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் வெற்றிவேல், சந்தான கிருஷ்ணன், வி.பி.கலைராஜன், செந்தமிழன், அமைப்பு செயலாளர் சுகுமார் பாபு, வர்த்தகர் அணி செயலாளர் சவுந்திர பாண்டியன்.

புதிய நீதிக்கட்சி

புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், இணைப் பொதுச் செயலாளர் ஆர்.டி.சேதுராமன், இளைஞரணிச் செயலாளர் எஸ்.ஏ.ராஜாராம், அமைப்பு செயலாளர்கள் எஸ்.பழனி, ஜி.செல்வம், ஏ.சி.எஸ்.பேரவை தலைவர் எஸ்.எல்.சுதர்சன், கொள்கை பரப்புச் செயலாளர் சி.கே.மனோகரமூர்த்தி. மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஆரணி வி.சீனிவாசன்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், பொருளாளர் புழல் ஏ.தர்மராஜ், துணைத் தலைவர் கல்பாக்கம் த.மோகன், கொள்கை பரப்பு செயலாளர் எம்.ஏ.எம்.பாலாஜி, மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.அய்யர், மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சி.எஸ்.விக்டர், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட பொருளாளர் மாங்காடு ஏ.முருகேசபாண்டி, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் புரசை சி.நாகராஜ், பொருளாளர் லட்சுமணன், தென்சென்னை வடக்கு மாவட்ட அமைப்பாளர் பொன்.அருணாசல பாண்டியன்.

நாம் தமிழர் கட்சி - திராவிடர் கழகம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எழும்பூர் தொகுதி செயலாளர் இரா.அய்யனார், மாவட்ட செயலாளர் பிரபாகரன், வட்ட செயலாளர் அமிர்தராஜ். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சேவியர், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் என்.ஆர்.பி.ஆதித்தன், மாநில இளைஞர் அணி இணை செயலாளர் டி.மகாலிங்கம், மாவட்ட செயலாளர்கள் முருகேச பாண்டியன், நாகப்பன், எம்.பி.முத்துராஜ், தென்சென்னை மாவட்ட தலைவர் என்.ஆர்.பி.ஆதித்தன், மாணவர் அணி மாவட்ட செயலாளர் முருகன்.

சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மாநில பொருளாளர் எம்.கண்ணன், மாவட்ட செயலாளர் பாஸ்கர். அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் நா.சேதுராமன். தே.மு.தி.க. வர்த்தக அணி செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன். விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, மாவட்ட தலைவர் இரா.செல்வம்.

ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி மாநில தலைவர் டி.எஸ்.தாசபிரகாஷ். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் ஜெ.தீபாவின் கணவர் மாதவன்.

மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால், மாவட்ட செயலாளர் கணேஷ் பிரபு, மதுரவாயல் பகுதி தலைவர் சி.சதீஷ், மதுரவாயல் பகுதி செயலாளர் ஜி.மைக்கேல், இளைஞரணி தலைவர் ஆர்.விக்கி, தென்சென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி பி.விக்கி, வாசுதேவன்.இந்திய கம்யூனிஸ்டு கட்சி

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.ஏழுமலை. ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், தலித் முன்னேற்ற கழக தலைவர் அன்பில் பொய்யாமொழி, மாநில செயலாளர் குமார், இணை செயலாளர் கருணாகரன். அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் பா.இசக்கிமுத்து, மாநில தலைவர் ஆ.மணியரசன், மாவட்ட தலைவர்கள் கதிரேசன், முருகன். புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயலாளர்கள் டி.ருசேந்திரகுமார், பரணி பி.மாரி, மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.எடமன், மாநில துணை பொதுச் செயலாளர் எம்.தர்மன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வீ.பா.இளையபாபு, தென்சென்னை துணைத் தலைவர் மு.ரவீந்தர், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் ஜெ.குமார். விடுதலை விரும்பிகள் கட்சி தலைவர் பெ.செங்கோடன், பொதுச் செயலாளர் நெல்லை சண்முகசுந்தரம், மாநில அமைப்பாளர் பெ.முருகேசன், மாநில இளைஞரணி செயலாளர் செ.கார்த்தி கோபால், மகளிரணி தலைவி வாசுகி. அகில இந்திய சமத்துவ கழக நிறுவனத் தலைவர் ஆர்.ராஜேஷ். அம்பேத்கர் முன்னணி கழக பொதுச் செயலாளர் திண்டிவனம் ஸ்ரீ ராமுலு. சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை தலைவர் மேலை நாசர்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம்

தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில துணை பொதுச் செயலாளர்கள் பால.முனியப்பன், எஸ்.வி.முத்துப்பாண்டியன். மாநில நிர்வாக குழு உறுப்பினர் காயல் ஆர்.எஸ்.இளவரசு, தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.எஸ்.ஆதித்தன், தென்சென்னை மாவட்ட தலைவர் இந்துநாதன், தென்சென்னை மாவட்ட பொருளாளர் அம்பேத்கர் சேகர், திருவொற்றியூர் நகர தலைவர் டி.முல்லைராஜா, டி.ஆர்.எம்.பிரைட்டன். வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் நா.செல்வம், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், அயன்புரம் தலைவர் எஸ்.ஜெகதீஷ் சவுந்தர் முருகன், துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், செயலாளர் ஜி.சந்திரசேகர், எம்.எஸ்.சக்திவேல், அருண்குமார் பாண்டியன், புகழரசன். எண்ணூர் கிளை தலைவர் அ.தயாளன். அசோக்நகர் கிளை செயலாளர் பொன்.அருணாசல பாண்டியன், துணை செயலாளர் ஸ்ரீதரன் பாண்டியன், பொருளாளர் சுந்தரமூர்த்தி.

திருச்சி மாவட்டம் அணியாப்பூர் அமைப்பாளர் மணலி எம்.ராஜ கோபால், திருச்சி புறநகர் மாவட்ட நற்பணி மன்ற துணைச் செயலாளர் டி.செல்வம்.

நாடார் சங்கங்கள்

சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், பொதுச் செயலாளர் டி.தங்கமுத்து, பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன், செயலாளர் எஸ்.செல்லதுரை, துணைத் தலைவர் எல்.தாமஸ். தெட்சிணமாற நாடார் சங்க மும்பை கிளை தலைவர் ராமராஜா, இந்திய நாடார்கள் கூட்டமைப்பு துணைத் தலைவர் டி.ராஜ்குமார். நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் வி.டி.பத்மநாபன், செயலாளர் ஜி.டி.முருகேசன், துணைத் தலைவர்கள் எம்.ஆர்.ஆர்.குணசீலன், ஆர்.எஸ்.ஜெயபால், டி.செல்வக்குமார், கமிட்டி உறுப்பினர்கள் வி.தங்கத்துரை, ஒய்.இமானுவேல். தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க நிறுவனத் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், பொதுச் செயலாளர் வி.ஜான் கிறிஸ்டோபர், கூடுதல் பொதுச் செயலாளர் எம்.மாரித்தங்கம், பொருளாளர் எம்.ஆர்.ஆர்.குணசீலன், செயலாளர்கள் எம்.மாடசாமி, வி.தங்கதுரை, துணைத் தலைவர்கள் எஸ்.ஆர்.பி.ராஜன், டி.செல்வகுமார், ஒருங்கிணைப்பாளர் டி.எம்.மாரீஸ்வரன். நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க செயலாளர் சி.திருப்புகழ், பொருளாளர் எஸ்.சிங்கராயர், கவுரவ தலைவர் டி.கிருஷ்ணபாண்டியன், நிர்வாகிகள் ஜி.பி.வி.ராஜசேகரன், எஸ்.பச்சையப்பன், டி.சித்திரைப்பாண்டியன், நாகராஜ், ஆர்.மாணிக்கவேல், வி.சரவணபவன்.

சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் ஆர்.சிதம்பரம். நாடார் மக்கள் சக்தி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், நிர்வாகிகள் பழனிகுமார், லாரன்ஸ். நெற்குன்றம் நாடார் சங்க செயலாளர் கே.முத்துராமன், துணைச் செயலாளர் ஊதான்ஸ்.

தமிழ்நாடு நாடார் சங்க மாநில தலைவர் முத்து ரமேஷ், காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் வி.எல்.சி.ரவி, மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீராம், பொதுச் செயலாளர் ஜார்ஜ். அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சென்னை மண்டல தலைவர் வி.கே.சி.எம்.செல்வராஜ். எர்ணாவூர் நாடார் உறவின் முறை பொதுச் செயலாளர் எஸ்.சுந்தரேசன்.

சென்னை, புறநகர் நாடார்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் த.ரவி, பொதுச் செயலாளர் எம்.ஜெயசங்கர், பொருளாளர் டி.ஜெயமணி, ஒருங்கிணைப்பாளர் செ.அருணாசலமூர்த்தி, செய்தி தொடர்பாளர் எம்.பி.ரமேஷ். பெரம்பூர் வட்டார நாடார்கள் ஐக்கிய சங்க செயலாளர் போ.செல்லம், பொருளாளர் ஐ.எஸ்.தாமோதரன், பகுதி செயலாளர் டி.கிருஷ்ணசாமி, ஐ.சுந்தர்ராஜ், ஆலோசகர் எஸ்.ரெங்கசாமி, செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.தனுஷ்கோடிராஜன். சென்னை கள்ளிகுளம் நாடார் சங்கத் தலைவர் என்.ஏ.தங்கதுரை, செயலாளர் ஏ.ஜூலியஸ், வண்ணாரப்பேட்டை நாடார் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.பி.ராஜன், பொருளாளர் பி.ராஜேஷ். பேறையூர் முத்துலிங்காபுரம் நாடார் உறவின் முறை நிர்வாகி பி.டி.பாஸ்கர். இனாம் கரிசல்குள நாடார் உறவின் முறை துணை செயலாளர் எம்.விஜயகுமார். தமிழக வணிகர் சம்மேளனம் மாநில தலைவர் கராத்தே வி.சந்துரு. அணியாப்பூர் நாடார் சங்க தலைவர் ஏ.தங்கவேல். சென்னை வாழ் போடுபட்டி நாடார் சங்க தலைவர் ஏ.எம்.முனிரத்னம், செயலாளர் டி.ஆர்.செந்தில்குமார், பொருளாளர் ஆர்.முத்து கருப்பன், ஆலோசகர்கள் பி.காசிபாண்டி, ஏ.திருமணிச்சாமி, ஆர்.கெச்சிலி ராஜ். தூத்துக்குடி நாடார் உறவின் முறை நிர்வாகி எம்.அறிவரசன். நெல்லை மாவட்ட நாடார் உறவின் முறை நிர்வாகி பி.ஞானம்.

திருவல்லிக்கேணி வட்டார நாடார் சங்க தலைவர் கே.சி.ராஜா, பொதுச் செயலாளர் கே.சிவராஜ், இணை பொது செயலாளர் கே.பிரகாஷ், துணைத் தலைவர்கள் ஏ.அமிர்த மணி, பி.தமிழ்செல்வம். பட்டுமேடு நாடார் சமூக ஐக்கிய சங்க தலைவர் டி.பி.செல்வராஜ், செயலாளர் எஸ்.அருணாசலமூர்த்தி, பொருளாளர் பி.ஜெயராஜ், ஆலோசகர் கே.வெள்ளைச்சாமி, துணைத் தலைவர் டி.வின்சென்ட், கு.அமிர்தராஜ், ஆர்.பெருமாள். வியாசை சுற்று வட்டார நாடார் இளைஞர் பேரமைப்பு ஸ்தாபக தலைவர் த.பத்மநாபன், காப்பாளர் ஆர்.காமராஜ், கவுரவ தலைவர் கே.ஆத்தியப்பன், தலைவர் எல்.கனகராஜ், செயலாளர் கே.ராஜமூர்த்தி, பொருளாளர் ஜி.பொன்ராஜ், துணைத் தலைவர் எம்.தவசிராஜன், துணைச் செயலாளர் எம்.சக்திவேல் ராஜ். சாலிகிராமம் சுற்று வட்டார நாடார் சங்கத் தலைவர் பி.அசோக்குமார்.

அமைப்புகள் - தொழிலதிபர்கள்

டாக்டர் கருணாநிதி, தொழிலதிபர்கள் வி.ஜி.சந்தோசம், தண்டப்பத்து ஜெயராமன், சபேஷ் ஆதித்தன், சிதம்பரம் டி.சி.ராஜாகுமார், ஆர்.எஸ்.செந்தில்குமார், மயிலை சந்திரசேகர், தென்காசி கப்பிளி முஸ்தபா. மணலிபுதுநகர் வைகுண்டபதி தலைவர் தங்கக்கிளி தங்கப்பெருமாள். எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன். ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம். நடிகர்கள் விவேக், கே.ராஜன், எஸ்.வி.சேகர், ‘செல்’ முருகன்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, கே.ஜோதிலிங்கம், பி.பாண்டியராஜன், இ.எட்வர்டு, எஸ்.மகேஷ்வரன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் எஸ்.சாமுவேல், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.துரைமாணிக்கம், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், எஸ்.சாமுவேல், ஏ.ஷேக்முகைதீன், வி.வினோத்பாபு, கே.ஏ.மாரியப்பன், எல்.ராமசாமி. காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ், சென்னை மண்டல தலைவர் பால் பாண்டியன், தென்மண்டல அமைப்பு செயலாளர் கே.கப்பல் ராஜா, வட்ட தலைவர் விவேகானந்தன். தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் மு.இனியவன். தமிழ்நாடு சி.பா.ஆதித்தனார் சமூக நல சேவை இயக்க நிறுவனத் தலைவர் பி.சி.பச்சைக்கனி. பம்மல் அண்ணா நகர் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.சுந்தரபாண்டியன், பொதுச் செயலாளர் எஸ்.பால்ராஜன், பொருளாளர் வி.நம்புசாமி, ஆலோசகர் கே.சி.முத்து. காமராஜர் ஆதித்தனார் கழக மாநில பொருளாளர் டி.எம்.பிரபாகரன். சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார்.

சென்னை பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் எம்.வி.திருப்பதி, மாநில பொருளாளர் எம்.வி.டி.புவனேஷ்வரன், மாநில ஆலோசகர் வி.வைரவராஜன், கொள்கை பரப்பு செயலாளர் ஆர்.கீர்த்திராஜன். அகில பாரத பெருந்தலைவர் காமராஜர் மக்கள் நற்பணி இயக்க மாநில பொதுச் செயலாளர் எம்.வி.டி.மதனவேல்ராஜன், மாநில மகளிரணி தலைவி டி.சுந்தர மீனாட்சி, மாவட்ட மகளிரணி தலைவி கே.தெய்வா.

தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நலச்சங்க மாநில தலைவர் வி.எஸ்.லிங்கபெருமாள். தென் இந்திய பொது நலச் சங்க பொதுச் செயலாளர் பி.வி.ராஜன். தமிழ்நாடு இளைஞர்கள் சங்க மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன். தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ். இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச்சங்க தலைமை நிலைய செயலாளர் டி.ரஜினிராஜ், மத்திய சென்னை மாவட்ட தலைவர் கே.பிரபாகரன். காமராஜர் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்க தலைவர் எம்.சி.செல்வக்குமார். ஐகோர்ட்டு வக்கீல்கள் இரா.சிவசங்கர், அமரன் டி.கிரீஷ், எஸ்.சபீதா, மு.வீரசெல்வம்.

தமிழன்னை நாளிதழ் செய்தி ஆசிரியர் ப.ரவி, தொழிலதிபர்கள் ஆர்.எல்.தனபால், டி.தங்கவேலு, இ.சந்தானம், தமிழன்னை கலை மன்ற செயலாளர் ஆர்.செல்வக்கண்ணன். திருவேற்காடு நகர ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஆர்.பாஸ்கர். கொன்டையன் கோட்டை மறவர் பேரவை ஆலோசகர் பூலிப் பாண்டியன். தமிழ்நாடு கம்மவார் நாயுடு சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஏ.ஜெயராமன். தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.உதயகுமார். சிந்தாதிரிப்பேட்டை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மக்கள் நலச் சங்கத்தின் செயல் தலைவர் ஜி.நாகராஜன், செயலாளர் எம்.சந்தர், பொருளாளர் என்.சந்திரபாபு. தேசிய மக்கள் அதிகார நீதி இயக்க ஒருங்கிணைப்பாளர் க.கார்த்திகேயன். ‘பார் அட் லா’ ஆதித்தனார் வக்கீல்கள் சங்க தலைவர் சி.எமிலிஷன், செயலாளர் எஸ்.சுஜின்ராஜ்.

தென் இந்திய பொது நலச் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.வி.ராஜன். அகில இந்திய மனித உரிமை கழக தொழிற்சங்கப் பேரவை நிறுவனத் தலைவர் ஆர்.முத்துராமன், மாநில தலைவர் பி.ராஜேஷ், அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ்.சுரேஷ்பாபு, அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் எம்.சண்முகவேல், மாநில பொதுச் செயலாளர் ஏ.ரத்தினராஜ், மாநில துணைத் தலைவர் ஆர்.நந்தகுமார். ஆதித்தனார் முரசு கணேசா, ஆறுமுக கண்ணன்.

சி.பா.ஆதித்தனார் பண்பாட்டு கழக தலைவர் மணலி என்.மாரிமுத்து, பொருளாளர் எம்.சமுத்திர பாண்டியன், செயலாளர் சோலை கணேஷ், பொதுச் செயலாளர் ஸ்டீபன். தமிழ்நாடு இஸ்லாமிய மக்கள் இயக்க மாவட்ட துணைத் தலைவர் புதுப்பேட்டை இஸ்மாயில். சி.பா.ஆதித்தனார் சமூக நல சேவை இயக்க பொருளாளர் டி.பொன் மாரியப்பன், தீபக் அமல்ராஜ்.

Next Story