கருணாநிதியின் குடும்ப சொத்து விவரங்கள் பற்றி மு.க.ஸ்டாலினால் பதில் சொல்ல முடியுமா? ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் சவால்


கருணாநிதியின் குடும்ப சொத்து விவரங்கள் பற்றி மு.க.ஸ்டாலினால் பதில் சொல்ல முடியுமா? ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார்  சவால்
x
தினத்தந்தி 29 Sep 2018 7:41 AM GMT (Updated: 29 Sep 2018 7:41 AM GMT)

கருணாநிதியின் குடும்ப சொத்து விவரங்கள் பற்றி மு.க.ஸ்டாலினால் பதில் சொல்ல முடியுமா? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் சவால் விடுத்து உள்ளார்.


பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதலமைச்சர், அமைச்சர்கள் மீது உண்மைக்கு புறம்பாக, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, அமைச்சர் உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது பொறுப்பற்ற அவதூறு பேச்சுக்களை ஸ்டாலின்  நிறுத்திக்கொண்டு, பண்பட்ட அரசியல் பணிகளை மேற்கொள்வது அவசியம் . கருணாநிதி, மகன்கள், மகள்கள் உள்ளிட்டோரின் சொத்து விவரம் பற்றி கேள்விகேட்க நான் ஒருகுழு நியமிக்கிறேன். பத்திரிகையாளர் முன் எனது குழு கேட்கும் கேள்விகளுக்கு ஸ்டாலினால் பதில் சொல்ல முடியுமா?
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story