20 ரூபாய் டாக்டர் ஜெகன்மோகன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்


20 ரூபாய் டாக்டர் ஜெகன்மோகன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 4 Oct 2018 5:54 PM GMT (Updated: 4 Oct 2018 5:54 PM GMT)

நெல்லை மாவட்டம் மேலப்பாவூரில் பிறந்து சென்னை மந்தைவெளியில் மக்களின் டாக்டராக திகழ்ந்த ஜெகன்மோகன் மறைவு செய்தி கேட்டு வேதனையடைந்தேன்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

நெல்லை மாவட்டம் மேலப்பாவூரில் பிறந்து சென்னை மந்தைவெளியில் மக்களின் டாக்டராக திகழ்ந்த ஜெகன்மோகன் மறைவு செய்தி கேட்டு வேதனையடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஏழைகளின் இதயத்தில் குடியிருந்த மனிதநேய டாக்டரான ஜெகன்மோகன் ஒரு ரூபாய் கட்டணத்தில் தனது மருத்துவ சேவையை தொடங்கி, 20 ரூபாய் கட்டணத்தை தாண்டாதவர் என்பது நினைத்துப் பார்க்க பெருமிதமாக மட்டுமல்ல எத்தகைய சேவை குணமிக்கவர் என்பதை காட்டுகிறது.

ஏழை எளியவர்களுக்கும் பணமின்றி சிகிச்சை அளித்த பண்பாளர், மனிதநேயத்தின் மறு உருவம், மக்களின் இணை பிரியா டாக்டர் இன்று நம்மிடம் இல்லை என்பது துயரமிகு செய்தி. அண்ணாவிடம் அறிமுகம் பெற்று, கருணாநிதியுடன் நட்பாக இருந்த அவர், ‘எமர்ஜென்சி’ காலத்தில் அடக்குமுறைகளையும் பொருட்படுத்தாமல் தலைவருக்கு மருத்துவம் பார்த்தவர் என்பதை எண்ணிப்பார்க்கும் போது பெருமையடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story