காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள 50 குழுக்கள் அமைப்பு கலெக்டர் பொன்னையா பேட்டி


காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள 50 குழுக்கள் அமைப்பு  கலெக்டர் பொன்னையா பேட்டி
x
தினத்தந்தி 4 Oct 2018 6:51 PM GMT (Updated: 4 Oct 2018 6:51 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள 11 துறைகளை சேர்ந்த 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.

தாம்பரம்

சென்னையை அடுத்த தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் ரூ.292 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடையாற்றில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. முடிச்சூர், வரதராஜபுரம், ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பிற்கு காரணமான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன.

மழை-வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் 11 துறைகள் மூலம் 50 மண்டல கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து குழுக்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியினை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் போதிய மணல் மூட்டைகள், ஜெனரேட்டர் தயாராக வைக்கப்பட்டு உள்ளது.

காஞ்சீபுரம் மற்றும் தாம்பரத்தில் பேரிடர் அவசர கால கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது மழை வெள்ளம் தொடர்பாக புகார் தெரிவிக்க கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

காஞ்சீபுரம் கட்டுபாட்டு அறை: 1077 மற்றும் 044-27237107, 27237207

தாம்பரம் கட்டுபாட்டு அறை: 044- 22410050

புகார்களை புகைப்படத்துடன் கீழ்கண்ட வாட்ஸ் அப் எண்களிலும் தெரிவிக்கலாம்.

9445051077 (காஞ்சீபுரம்)

9445071077 (தாம்பரம்)

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story