தொடர் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


தொடர் மழை காரணமாக  திருவள்ளூர் மாவட்டத்தில்  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை
x
தினத்தந்தி 5 Oct 2018 1:16 AM GMT (Updated: 5 Oct 2018 1:20 AM GMT)

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  இதற்கிடையே, அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், வரும் 7 ஆம் தேதி, மிக கனமழை பெய்யும் என்று தமிழகத்திற்கு ரெட் அலார் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மிதமான மழை பெய்து வருகிறது.எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வந்த நிலையில், நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதேபோல், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்து வருகிறது. 

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

Next Story