ஓ.பன்னீர்செல்வம்–தினகரன் பிரச்சினை: பங்காளி சண்டையில் தலையிட விரும்பவில்லை பொன்.ராதாகிருஷ்ணன்


ஓ.பன்னீர்செல்வம்–தினகரன் பிரச்சினை: பங்காளி சண்டையில் தலையிட விரும்பவில்லை பொன்.ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 5 Oct 2018 7:00 PM GMT (Updated: 5 Oct 2018 6:32 PM GMT)

ஓ.பன்னீர்செல்வம்–தினகரன் பிரச்சினை: பங்காளி சண்டையில் தலையிட விரும்பவில்லை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரனும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறுவது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டனர்.

அ.தி.மு.க.வின் மற்றொரு பிரிவுதான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். இரு கட்சிகளும் பங்காளி சண்டை போடுகிறார்கள். அதில் தலையிட விரும்பவில்லை. அவர்கள் பேசிக்கொள்வதற்கு நான் பதில் செல்ல வேண்டுமா? என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Next Story